நேற்று பிக்பாஸ் பழைய மாவை பட்டி டிங்கரிங் பார்த்து புது தோசை சுடுவது போல ஒரு புதிய டாஸ்க்கை அளித்தார். அர்ச்சனா, பாலாஜி தலைமையில் வீடு இரண்டு அணியாக பிரிய வேண்டும். தங்களுக்கு வேண்டிய போட்டியாளர்களை இருவருமே தேர்வு செய்து கொள்ளலாம். அதன்படி பாலாஜி தன்னுடைய அணியில் ரியோ, நிஷா, ஆரி, அனிதா மற்றும் ஆஜீத்தை எடுத்து கொண்டார்.
அர்ச்சனா தன்னுடைய அணியில் சோம், கேப்ரியலா, ஷிவானி, ஜித்தன் ரமேஷ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோரை எடுத்து கொண்டார். பாலாஜி அணி மனிதர்களாகவும், அர்ச்சனா அணி இயந்திர அணியாகவும் மாறியது. இயந்திர அணியில் இருக்கும் ரோபோக்களுக்கு இரண்டு ஹார்ட்டுகள் கொடுக்கப்படும். அவர்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் அவர்களிடம் இருக்கும் ஹார்ட்டுகளை மனிதர்கள் அணி எடுத்து கொள்ளலாம்.
இதேபோல பேசிக்கொண்டிருக்கும் போது இடையில் சென்ற அனிதாவை பேச்சுவாக்கில் ரியோ இடித்து விட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஷிவானி, அனிதா ரெண்டு பேருக்குமே இந்த சம்பவம் நடந்து இருக்கு போல என கருத்து தெரிவித்து வருகின்றனர்.