பாரதி கண்ணம்மா சீரியலில் வரும் பாரதி மற்றும் கண்ணம்மா ஆகிய 2 கேரக்டர்களும் 9 வருடங்களாக பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில், விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு வழக்கு தொடர்ந்தார். இவர்களிடம் தனித்தனியே வளர்ந்து வரும் இவர்களின் குழந்தைகள் தற்போது பாரதியின் தாயார் சௌந்தர்யாவிடம் வளர்ந்துவரும் நிலையில் இவர்களை 6 மாதம் சேர்ந்து வாழச் சொல்லி, நீதிபதி உத்தரவு கொடுத்துள்ளார்.

இதனால் இருவரும் கண்ணம்மாவின் வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே அண்மையில் தான் கண்ணம்மாவின் கீழ்வீட்டுக்கு குடிவந்த அறந்தாங்கி நிஷா, தன் பெயர் வாய்தா வடிவக்கரசி என்றும், கோர்ட்டில் தான் மிகவும் பிரபலம் என்றும் கூறியதுடன், பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் அண்மையில் விவாகரத்து கேஸ்க்காக கோர்ட்டுக்கு வந்தபோது அவர்களை பார்த்ததாகவும் குறிப்பிட்டார். அத்துடன் அவ்வப்போது, பாரதியை மிரட்டி, கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ்வதற்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால், ஜட்ஜ் அம்மாவிடம் சொல்லிவிடுவதாக கூறி வருகிறார்.
இந்நிலையில் அறந்தாங்கி நிஷா, திடீரென பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் வசிக்கக் கூடிய கண்ணம்மாவின் வீட்டுக்கு வந்து திடீரென ஒரு அவசர உதவி கேட்கிறார். அதன்படி, சொந்தக் காரர்கள் மிகுதியாக வந்துவிட்டதால், உங்கள் வீட்டில் தங்க வைத்துக் கொள்ளலாமா? என பாரதி மற்றும் கண்ணம்மா இருவரிடமும் கேட்கிறார்.
அதற்கு கண்ணம்மா ஒரு கணம் முழிக்கிறார். தயங்கியபடி, நிஷாவிடம், “இல்ல .. நான் ஹால்ல படுப்பேன். அவர் பெட்ரூம்ல படுப்பார். அதான் யோசிக்கிறேன்” என சொல்கிறார். அதற்கு நிஷாவோ, திரும்பவும் ஜட்ஜ் அம்மா கிட்ட பேசணுமா? அவங்க சொன்னாதான் நீங்க கேப்பீங்களா? என்று அதட்டவும், பாரதி நிஷாவை கையெடுத்து கும்பிட்டு, “அம்மா தாயே.. நாங்க உள்ளயே படுத்துக்கிறோம்” என சொல்லி, கண்ணம்மாவிடம் பெட்ரூமை ஷேர் பண்ணிக் கொள்கிறார்.
காதல் திருமணம் செய்து கல்யாணம் பண்ணி, பிரிந்த இந்த தம்பதியர் கட்டிலில் கை, கால் படாமல் தூங்குவார்களா? என்று பார்த்தால், அதற்கும் காலம் உருவாக்கி தந்த வாய்ப்புதான் அறந்தாங்கி நிஷாவின் இந்த வாய்தா வடிவுக்கரசி கேரக்டர் என்று சொல்லலாம்.
எதற்கெடுத்தாலும் இந்த வாய்தா வடிவுக்கரசி என்று சொல்லி பயமுறுத்தியே பாரதி மற்றும் கண்ணம்மா இருவரிடையே நெருக்கத்தை அதிகப்படுத்தி வருகிறார்.
இதனால் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒரு புரிதலுக்கு வந்து பிரிதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் சரி என்கிற ஆர்வத்துடன் ரசிகர்கள் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர்.