"அபிராமியோட RELATIONSHIP-ல இருந்தேன்".. யாஷிகாவின் EX-காதலர் நிரூப்.. BIGG BOSS ULTIMATE-ல் பேச்சு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில், இப்போது பிக்பாஸ் தமிழ் ஓடிடி நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

Advertising
>
Advertising

பிக்பாஸ் ஓடிடி

ஓடிடி என்பதால் சென்சார் கட் கூட இன்றி உள்ளது உள்ளபடி பார்க்க முடியும் வண்ணம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதனிடையே இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் ஓடிடியில் உட்கார்ந்து முழுமையாக பார்க்க முடியாதவர்கள் இந்த நிகழ்ச்சியின் ஒரு மணி நேர சுருக்கமான தொகுப்பினை தினமும் இரவு ஹாட் ஸ்டாரில் அன்றன்றய எபிசோடுகளாக பார்க்க முடியும்.

Also Read: "எப்ப தாத்தா ஆவீங்க?".. BiggBossUltimate-ல் ஸ்ருதிஹாசன் திருமணம் பற்றி சூசகமாக பேசிய கமல்!

டிஸ்னி+ஹாட் ஸ்டாரில்

ஆம், தினமும் இரவு டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் இரவு 9 மணிக்கு வெளியாகும் சிறப்பு வெர்ஷனில் ஒரு நாள் முழுவதும் (24 மணி நேரமும்) ஓடும் நிகழ்ச்சியின் ஹைலைட் விஷயங்கள் ஒட்டுமொத்தமாக தொகுக்கப்பட்டு சுருக்கமாக காண்பிக்கப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் ஓடிடி அல்டிமேட் நிகழ்ச்சியின் தொடக்க நாளன்றே தெரிவித்தார். அத்துடன் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் லாஞ்ச் விஜய் டிவியிலும் நேரடியாக ஒளிபரப்பானது.

பிக்பாஸ் அல்டிமேட் ஹவுஸ்மேட்ஸ்

இப்படி ஏற்கனவே 5 சீசன்களை கடந்து இந்த ஓடிடி பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவர, ஹவுஸ்மேட்ஸாக முந்தைய சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக இருந்த வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, தாமரை செல்வி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தோத்த இடத்துல தான் ஜெயிக்க முடியும்

இந்த நிகழ்ச்சியை பொருத்தவரை , ‘தொலைச்ச இடத்துல தான் தேட முடியும், தோத்த இடத்துல தான் ஜெயிக்க முடியும்’ என்கிற டேக்லைன் வசனத்துக்கு ஏற்ப, முந்தைய சீசன்களில் பல்வேறு காரணங்களால் தோல்வியுற்ற போட்டியாளர்கள் புதுப்புது வியூகத்துடன் வந்திருக்கின்றனர். இவர்களுள் நிரூப், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் பங்கேற்ற போட்டியாளர். அனைவராலும் நிரூப் வெற்றி பெறவும் வாய்ப்பிருப்பதாக கருதப்பட்ட போட்டியாளர்.

‘ஸ்ட்ராங் போட்டியாளர்’

அத்துடன் 5வது சீசனில் அனைத்து போட்டியாளர்களாலும், ‘ஸ்ட்ராங் போட்டியாளர்’ என சொல்லி நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளரான நிரூப், முந்தைய சீசன் போட்டியாளரும் பிரபல நடிகையுமான யாஷிகா ஆனந்த்தின் முன்னாள் காதலர் என்பதை அனைவருமே அறிவார்கள். முன்னதாக 5வது சீசனில் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதுமே கதை சொல்லும் டாஸ்கில் அந்த உண்மையை சொன்ன நிரூப் அப்போது யாஷிகாவுக்கு நன்றியும் கூறினார்.

அபிராமியும் நிரூப்பும் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளனர்..

இந்நிலையில் இப்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் உள்ளே சென்றதுமே, தானும் அபிராமியும் காதலித்த உண்மையை நிரூப் கட்டவிழ்த்துள்ளார். இது ஏற்கனவே நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், பலருக்கும் புதிய தகவலாகவே இருந்தது. ஆம், பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கிய நிலையில், அபிராமியை நாமினேட் செய்த நிரூப், “அபிராமியும் நானும் கொஞ்ச வருடம் முன்பு ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம்.

ஆனால் நான் அப்போது பார்த்த அபிராமி இவர் இல்லை. அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது.? ஏன் இந்த மாற்றம்? என தெரியவில்லை. ஆனால் நான் பழகிய அபிராமிக்கும், இப்போது உள்ளே பார்க்கும் அபிராமிக்கும் சம்மந்தமில்லை. வேறு யாரையோ பார்ப்பது போல் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: BiggBossUltimate வீட்டில் நிரூப், அபினய் போல அபிராமி Smoke பண்ணியதால் என்ன? பொங்கிய நெட்டிசன்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Nirup Opens up his relationship with Abhirami BiggBoss Ultimate

People looking for online information on BiggBoss OTT, BiggBoss Ultimate, Niroop Abhirami relationship, Niroop Opens up his relationship with Abhirami, Nirup Abirami Relationship will find this news story useful.