பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று நிரூப் மற்றும் ஸ்ருதி ஆகியோருக்கு திருமணம் நடத்திவைப்பது போல வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ARR - உதயநிதி - மாரி செல்வராஜ்... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தெறி கூட்டணி
பிக்பாஸின் அல்டிமேட்:
ரசிகர்களிடம் பேராதரவு பெற்ற பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஐந்து சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த ஐந்து சீசன் நிகழ்ச்சிகளையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 5 சீசன்களுக்குப் பிறகு இப்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் விதமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
கமலுக்கு பதில் சிம்பு:
ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். ஆனால் இடையில் அவர் நடிக்கும் விக்ரம் படத்தின் வேலைகள் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். அவருக்கு பதிலாக இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அவர் நிகழ்ச்சிக்கு வந்த போது அதுவரை சிம்புதான் வரப்போகிறார் எனத் தெரியாத போட்டியாளர்கள் இன்ப அதிர்ச்சியில் அவருக்காக உற்சாகமான வரவேற்பைக் கொடுத்தனர்.
கவனத்தை ஈர்த்த வீடியோ:
இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இணையத்தில் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களைக் கொண்ட வீடியோக்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்தவகையில் இப்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களான நிரூப் மற்றும் ஸ்ருதி ஆகிய இருவருக்கும் திருமணம் நடப்பது போல வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு குழுவாக பிரிந்து மாப்பிள்ளை வீட்டார் மற்றும் மணமகள் வீட்டாராக பரிசம் போட்டு பாரம்பரிய முறையில் திருமணத்தை நடத்திவைப்பது போலவும், மணமக்கள் மூத்தவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதுபோலவும் அந்த வீடியோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் கொடுக்கும் வித்தியாசமான டாஸ்க்குகள்:
இதைப் பார்த்த ரசிகர்கள் குழம்பிப் போக இது பிக்பாஸில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்க்கின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்புள்ளது. முன்பு இதுபோல அபிராமி மற்றும் பாலாஜி ஆகியவர்களைக் கணவன் மனைவியாக நடிக்க சொல்லி, அது சம்மந்தமாக பாலாஜிக்கும் அபிராமிக்கும் சண்டை நடப்பது போல ஒரு வீடியோ வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
வலிமை தயாரிப்பாளருடன் இணையும் RJ பாலாஜி.. ஃபர்ஸ்ட் லுக் எப்போ? மங்களகரமான அப்டேட்