"முடியாது.. முடியாது..".. அதட்டிய பாவனி.. அடங்காத நிரூப்.. ஆரம்பிச்சிடுச்சுடா அடுத்த போர்! #BIGGBOSSTAMIL5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் தற்போது பொம்மை டாஸ்க் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

niroop not obeying pavani rules in living area biggbosstamil5
Advertising
>
Advertising

இந்த பொம்மை டாஸ்கில் நிரூப் மற்றும் வருண் இருவரின் ஆக்ரோஷமான சண்டை பரபரப்பாக இருந்ததை அனைவரும் அறிவர். இந்த களேபரத்துக்கு நடுவில் பிக் பாஸ் வீட்டுக்குள் தற்போது லிவ்விங் ஏரியாவில் பாவனி தான் கேப்டனாக இருக்கிறார் என்பதை பலரும் மறந்து இருப்பார்கள்.

niroop not obeying pavani rules in living area biggbosstamil5

அதன் விளைவு பாவனி, தான் கட்டளையிட்டால் யாருமே கேட்பதில்லை என்றும் ஆண்கள் அதிக ஆதிக்கம் செலுத்தினால் மட்டும் கேட்பார்கள். பெண்கள் ஆளுமை செலுத்தும் போது ஆண்கள், பெண்கள் யாருமே கேட்பதில்லை என்று புலம்பினார். இதனிடையே பிரியங்கா, மது உள்ளிட்ட சிலர் பாவனிக்கு கட்டுப்படுவதாக தெரிவித்து வந்தனர்.

niroop not obeying pavani rules in living area biggbosstamil5

அதன்படி லிவிங் ஏரியாவுக்குள் அனுமதி இன்றி வந்ததற்காக பிரியங்கா தானாகவே முன்வந்து பாவனியிடம், தண்டனை கேட்டு பெற்று தோப்புக்கரணம் போட்டார். அப்போது பிரியங்கா, ஆளுநர் சொன்னதை தான் கேட்பேன், விதிகளுக்குட்பட்டு நடப்பேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

இதேபோல் மதுமிதா ரூல்ஸை பிரேக் பண்ண மாட்டேன் என்று சொல்லிக்கொண்டே லிவிங் ஏரியாவை சுற்றி நடந்து வந்தார். அந்த வகையில், லிவிங் ஏரியாவுக்குள் அனுமதியின்றி வந்ததாக நிரூப்பின் மீது பாவனி குற்றம் சாட்டியதுடன் அவருக்கு தண்டனை கொடுப்பதாக குறிப்பிட, நிரூப், முதலில் தண்டனையை ஏற்க முடியாது என அடம் பிடித்து, பின்னர், தொடர்ச்சியாக வாக்குவாதம் செய்தார்.

மேலும் நூறு முறை லிவிங் ஏரியாவை சுற்றி நடந்து வரவேண்டும் என்று பாவனி நிரூப்பிடம் சொன்னதற்கு, “என்னை தவிர வேறு யாருக்கு இப்படியான தண்டனை கொடுத்தாய்?” என்று கேட்டு வாதிட்டார். கடைசியாக 50 சுற்று நடக்க நிரூப் ஒப்புக் கொண்டார். ஆனால், “ரூல்ஸை பிரேக் பண்ண மாட்டேன்” என்று வாசகங்களை சொல்லிக்கொண்டே நடப்பதற்கு பாவனி அறிவுறுத்த, அதற்கோ நிரூப், முடியவே முடியாது என்று கூறிவிட்டார். 

இதை பார்த்த வருண், “பாவனியிடம், நிரூப்புக்கு வீடு பெருக்கும் தண்டனையை கொடு, ஒரு தண்டனை முடிவதற்குள் அவர் ஏதேனும் செய்தால் அடுத்த தண்டனையை கிடு” என்று அட்வைஸ் செய்திருந்தார். ஆனால் நிலமையை நிரூப்பிடம் பேசமுடியாத அளவுக்கு மோசமாக இருந்ததை பார்த்த பாவனி, “ஆனா எல்லாரும் நல்லா பண்றீங்கடா டேய்!” என அனைத்து ஆண்களையும் பார்த்து புலம்பினார். 

தொடர்புடைய இணைப்புகள்

Niroop not obeying pavani rules in living area biggbosstamil5

People looking for online information on Akshara, BiggBossTamil5, Niroop, Pavani, Piriyanka will find this news story useful.