விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5.
கிராண்ட் ஃபினாலே வாரம்
இந்த நிகழ்ச்சியில் தற்போது மிக குறைந்த போட்டியாளர்களே ஆடிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே வாரம் நடந்துகொண்டிருப்பதால யார் ஜெயிக்க போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
நிரூப் - பிரியங்கா
குறிப்பாக இந்நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் நிரூப் இருவருக்கும் இடையேயான அன்புச் சண்டைகளும், வம்புச் சண்டைகளும் பிக்பாஸ் வீட்டில் நிறையவே நடந்திருக்கின்றன. குறிப்பாக அன்புக்கு அடிமை என்று தன்னை குறிப்பிட்டு அடிக்கடி சொல்வார், நிரூப்போ, பிரியங்காவின் மீது பல முறை விமர்சனம் வைத்துள்ளார்.
மன்னிப்பு கேட்டு நன்றி சொன்ன நிரூப்
இதனிடையே கடந்த வாரம் பிரியங்காவிடம் மன்னிப்பு கேட்ட நிரூப், “நான் உன்னை விட்டு விலகவே பலமுறை வெறுத்து பேசினேன், இந்த கேம்காக.. என்ன செய்வது இப்படி ஒரு ஃப்ரண்டு கிடைக்கும்போதுதான் இப்படி ஒரு ஷோவும் கிடைக்குது” என கூறினார். இதேபோல் நன்றி சொன்ன நிரூப், “நிறைய முறை நீ எனக்காக நின்றிருக்கிறாய்.. அப்படி யாரையும் நான் இங்கு பார்க்கவில்லை” என்று குறிப்பிட்டார்.
அன்பின் பரிசு
இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் பிக்பாஸ் கொடுத்துள்ள டாஸ்க் அன்பின் பரிசு. இந்த அன்பின் பரிசு டாஸ்க்கில், “பிக்பாஸ் வீட்டில் நீங்கள் விரும்பும் மற்றொரு நபருக்கு பரிசு கொடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டது. இதனை அடுத்து இந்த டாஸ்க்குக்காக பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் பரிசுகளை பெட்டியில் வைத்து தயார் செய்து தங்களுக்கு விருப்பமான நபருக்கு கொடுத்தனர்.
நெகிழ்ச்சி கொடுத்த நிரூப்
அதில் பிரியங்கா ராஜூவுக்கு கை விரல்கள் போன்றதொரு மாடலை பரிசாக கொடுக்கிறார். இதேபோன்று நிரூப் பிரியங்காவுக்கு ஒரு தங்க அணிகலனை பரிசாக கொடுக்கிறார். அதை கொடுக்கும்போது, “என் அம்மா இதை தொடவே கூடாது என சொல்லி என்னிடம் கொடுத்தார். ஆனால் நான் என் அம்மாவை போன்றதொரு பெண்ணை பார்த்தேன் என என் அம்மாவிடம் சொல்லி இருந்தேன்!” என கூறினர்.
இதைக் கேட்டதும், உடனே பிரியங்கா நிரூப்பை கட்டி அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தினார்.