“சகுனி வேல பாக்காத.. நீ செஞ்சதுக்கு பழிவாங்குவேன்”.. MIRROR TASK-ல் பேசிய நிரூப் .. அழுதுவிட்ட அபினய்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5-ல்,  இந்த வார லக்ஜூரி பட்ஜெட் டாஸ்காக , “உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி” என்று ஒரு டாஸ் அறிவிக்கப்பட்டது. அதன்படி, போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, ஒரு அணியில் இருக்கும் நபர்கள், தங்களைப் போலவே இருக்க வேண்டும், மற்ற அணியைச் சேர்ந்த ஒவ்வொரு நபரும் எதிரணியில் இருக்கும் ஒவ்வொரு நபரின் கண்ணாடி பிம்பமாக செயல்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

niroop critisied Abhinay Cried in mirror task biggbosstamil5
Advertising
>
Advertising

இதில், சிபி, நிரூப், இசை, ஐக்கி, பிரியங்கா, பாவனி ஆகியோர் ஏ அணியிலும்,  அக்‌ஷரா, அபினய், வருண், இமான், ராஜூ, தாமரை ஆகியோர் பி அணியிலும் இடம்பெற்றுள்ளனர். அதாவது, சிபி உள்ளிட்டோர் இருக்கும் அணிடினர், முதல் நாளில், எதிர் அணியினருக்கு கண்ணாடியாக செயல்பட வேண்டும். எதிர் அணியில் உள்ளவர்கள் இயல்பாக இருப்பார்கள்.

niroop critisied Abhinay Cried in mirror task biggbosstamil5

குறிப்பாக, இடையில் கண்ணாடி நபருக்கும், நார்மலாக இருக்கும் நபருக்கும் ஒருவருக்கொருவர் கையைப் பிடித்துக்கொண்டபடி இருக்க, ஒரு உரையாடல் நடக்கும். அந்த உரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, இருவரில் யாராவது ஒருவருக்கு, அதைத் தொடர விருப்பம் இல்லாமல் பிடித்துக் கொண்டு இருந்த கையை விட்டு விட்டால், அந்த அணியை சேர்ந்தவர் எதிரணிக்கு அவரின் ஒரு பேட்ஜை கொடுத்துவிட வேண்டும். இரண்டாவது பேட்ஜில் இரண்டாம் நாளன்று டீம் பி கண்ணாடியாக மாறி, டீம் ஏ நபர்களை பிரதிபலிக்க வேண்டும் இறுதியில் எந்த அணியில் பேட்ஜ்கள் அதிகமாக உள்ளதோ, அந்த அணி இந்த லக்ஜூரி பட்ஜெட் டாஸ்கில் வெற்றி பெறும்.

இந்தநிலையில் நிரூப் முன்னால் நின்ற அபினயிடம் அவரது கையை பிடித்தபடி பேசிய நிரூப், “தொடக்கத்தில் உன்னை எனக்கு பிடித்திருந்தது. ஆனால் நாள் போக போக நீ நீயாக இருக்கிறாயா என்கிற சந்தேகம் உண்டானது. எப்போதுமே இன்னொருவரின் நிழலில் நின்று கொண்டிருப்பாய். நான் ஒன்று சொன்னால் அதன் தொடர்ச்சியாக ஒரு விஷயத்தைச் சொல்வாய். இதுதவிர சொந்தமா யோசிப்பதற்கு உனக்கு மூளை இல்லையோ என்று பலமுறை தோன்றி இருக்கிறது.‌

யாருக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் நீ முதலில் போய் நிற்பாய். நீ நல்லவன் என்று நம்புவதற்கு எனக்கும் ஆசைதான்.. நீ அதுவாய் கூட இருக்கலாம்.. ஆனால் நீ நல்லவன் என்று சொல்லிக் கொள்வதற்கு நீ எதுவும் அந்த மாதிரி செய்தது கிடையாது. ஆனால் ஒருவேளை இந்த கேமரா எல்லாம் உன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாமே செய்கிறாயா என்று தெரியவில்லை.

ஆனால் நீ ஊதுகிறாயோ இல்லையோ... அந்த இடத்தில் பிரச்சினை பெரிதாக ஆகி இருக்கிறது.. ஒவ்வொரு இடத்திலும் நீ ஏதோ பிரச்சினை செய்து இருக்கிறாய் என்று தோன்றுகிறது. ஏதோ ஒரு விஷயத்தில் உன்னை எனக்கு பிடிக்காமல் போய் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. எனக்கு உன்னை பிடிக்காமல் இருப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஒருவேளை இந்த கேமராக்கள் எதுவும் இல்லை என்றால், நீ வேறு மாதிரி இருந்திருப்பாயோ என்கிற ஒரு சின்ன சந்தேகம் அல்லது ஒரு ஆசைகூட இருக்கிறது.

இந்த டாஸ்கில் கூட நீ என் முடியை வெட்ட வைத்தாய்.. நான் கேன்சர் நோயாளிகளுக்கு இதை தானமாக கொடுப்பதற்காக வளர்க்கிறேன் என்று கூறியிருந்தேன். அவர்களின் முடியை நீ வெட்ட விட்டுவிட்டாய்.. இதற்கு நான் கண்டிப்பாக பழிவாங்குவேன் என்பதை உன்னிடம் சொல்கிறேன். உனக்கு ஏதாவது எனக்கு எதிராக இருந்தால், அதாவது உனக்கு என்னை தாக்க வேண்டும் என்று தோன்றி இருந்தால் முகத்துக்கு நேராக வந்து சொல். ஒருவரின் நிழலில் இருக்காதே. இந்த சகுனி எனும் பட்டம் வருணுக்கு நான் கொடுத்தேன். அதே வேலையை நீயும் பார்க்காதே. எப்போதுமே அடுத்தவர்களுக்கு ஜால்ரா தட்டாதே. தயவுசெய்து ஜால்ரா தட்டாதே. ஜால்ரா தட்டுவதே உன்னுடைய கேம் திட்டமாக இருந்தாலும் பரவாயில்லை. நான் யாரிடமாவது ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால் அங்கு வந்து அதை குழப்பி அல்லது அதையே உன் கருத்தாக மாற்றிச் சொல்லி நீ கிரெடிட் வாங்கிக் கொள்வது எனக்கு பிடிக்காது. அது முட்டாள்தனம். அப்படியான ஒருவரை நான் பார்த்ததே கிடையாது.

ஆனால் நீ கண்டெண்ட்க்காக இப்படி செய்வதை நினைக்கும்போது உன்னிடம் இருந்து விலகி இருக்கலாம் என்று தோன்றும். நீயும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்கிற ஆசை உனக்குள்ளே இருந்திருக்கிறது. அதே இடத்தில் யார் நல்ல பேரு வாங்கினாலும் அந்த இடத்தில் நீயும் நல்ல பேர் வாங்க வேண்டும் என்கிற ஆசை உனக்குள் இருந்ததை நான் நிறைய இடத்தில் பார்த்திருக்கிறன். உனக்கு அந்த வஞ்சப்புகழ்ச்சி பிடிக்குமோ.. அந்த வார்த்தை எனக்கு சரியாக தெரியவில்லை.. அதற்காக நீ பண்ணுகிறாயா என்று நிறைய இடத்தில் தோன்றி இருக்கிறது. எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும் என்று தோன்றுகிறது. நேரம் நிறைய செலவு செய்து இருக்கிறோம். அதேநேரம் எல்லாம் விரையம் என்று நிறைய இடத்தில் யோசித்திருக்கிறேன்.

உன்னிடம் ஒரு போலித்தனம் தெரிகிறது. அதுவே உன் இயல்பாகவே இருக்கலாம். ஆனால் நான் உன்னை போல் யாரையும் வெளியில் பார்த்ததில்லை. அதனால் எனக்கு இப்படி புதிதாக இருக்கிறது. இப்படியான ஒரு ஆட்டத்தை நீ ஒரு தந்திரோபாயமாக செய்கிறாய் என்று உன் தோழி அக்‌ஷரா கூட என்னிடம் ஒருமுறை கூறியிருந்தார்” என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து அபினய் கண்கலங்க, அக்‌ஷரா மற்றும் பிரியங்கா ஓடிவந்து அபினயின் கண்ணீரை துடைத்தனர். பின்னர் நிரூப் தான் போலி என்றும், ஓரு முடியை வெட்டினால் கேன்சர் மையத்துக்கு அந்த முடியை கொடுக்க முடியாமல் போகாது என்றும் அபினய் பேசியதுடன், தொடர்ந்து நிரூபிடம் பேசப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். ஆனால் நிரூப்போ, “நான் உனக்கு முன்பே சொல்லியும் கேன்சர் நோயாளிகளுக்காக நான் வளர்க்கும் முடியில் ஒரு முடியில் வெட்டுவதில் கூட உனக்கு என்ன அவ்வளவு சந்தோஷம்?” என்று அபினயிடம் கேட்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Niroop critisied Abhinay Cried in mirror task biggbosstamil5

People looking for online information on Biggbosstamil, BiggBossTamil5, Vijay Television will find this news story useful.