ஐதராபாத்: நடிகர் அஜித் உடன் மீண்டும் பிரபல தொழில்நுட்ப கலைஞர் இணைந்துள்ளார்.
போனி கபூர் தயாரிப்பில் நிரவ் ஷா ஒளிப்பதிவில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது.
வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள். வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது. AK61 படத்தின் பூஜை நேற்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பும் நேற்று முதல் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் துவங்கி உள்ளது. இந்த AK 61 படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்ற உள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை, படங்களை அடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் - எச். வினோத் உடன் இணைகிறார்.
மேலும் கடந்த 15 வருடங்களில் கிரீடம் (கூடுதல் ஒளிப்பதிவு), பில்லா, நேர்கொண்ட பார்வை, வலிமை, AK 61 ஆகிய 5 படங்களில் அஜித் குமார் உடன் இணைந்து நிரவ் ஷா பணிபுரிந்துள்ளார்.