VIDEO: "லவ் யூ புருஷா".. இயக்குநருடன் கல்யாணம் ஆன கையோடு 'இப்படி ஒரு நாளை' கொண்டாடிய நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அகத்தியனின் மகளும் நடிகையுமான நிரஞ்சனி அகத்தியன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமியை தற்போது திருமணம் செய்துள்ளார்.

இந்த திருமணத்தைத் தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வந்து ஒரு வருடம் ஆனதை குறிப்பிட்டு தமது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில், “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வந்து ஒரு வருடம் ஆகிறது. இதனை நாம் இணைந்து கொண்டாடுகிறோம். லவ் யூ புருஷா” என பதிவிட்டுள்ளார்.

இதே போல், படப்பிடிப்பின் போது தம்மை என்கரேஜ் செய்து ஊக்குவித்த துல்கர் சல்மான் மற்றும் தன்னுடன் நடித்த சக நடிகை ரீது வர்மா, ரக்‌ஷன், கவுதம் மேனன் என அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.  இதேபோல் ஸ்ரேயா என்கிற ஒரு கதாபாத்திரத்தை தன்னை நம்பி கொடுத்த தேசிங்கிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் “இதை டைப் பண்ணும்போது உங்க மனைவியா உங்க பக்கத்தில் உட்கார்ந்திருப்பேன் என நினைத்தே பார்க்கவில்லை. லவ் யூ புருஷா” என்று தெரிவித்துள்ளார். இப்படத்தின் நாயகன் துல்கர் சல்மானும் தன்னுடைய கரியரில் பெரிய ஹிட் கொடுத்ததாகவும், இந்த படத்துக்கும் சக நடிகர்களுக்கும் இதை விரும்பி பார்த்த ஆடியன்சுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ALSO READ: கணவருடனான ஃபோட்டோவை பகிர்ந்து சிம்பு - தனுஷ் பட நடிகை சொன்ன நல்ல விஷயம்!

VIDEO: "லவ் யூ புருஷா".. இயக்குநருடன் கல்யாணம் ஆன கையோடு 'இப்படி ஒரு நாளை' கொண்டாடிய நடிகை! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Niranjani Kannum Kannum Kollaiyadithaal 1 yr நிரஞ்சனி தேசிங்

People looking for online information on Dulquer salmaan, Kannum Kannum Kollaiyadithaal, Kannum Kannum Kollaiyadithaal Tamil, Marriage, Niranjani Agathiyan, Wedding will find this news story useful.