இரண்டு நாளாக உலகப்புகழ் பெற்ற தமிழக கோயிலில் நடிகை நிமிஷா சஜயன்.. வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல மலையாள நடிகை நிமிஷா சஜயன் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்'.. முக்கிய உரிமத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

நடிகை நிமிஷா சஜயன் தனது முதல் படமான தொண்டிமுதலும் ட்ரிக்சாக்ஷியும் படத்தின் மூலம் பிரபலமானவர்.

பின்னர் நிமிஷா தி கிரேட் இந்தியன் கிச்சன், நயத், சோழா, மாலிக், ஆகிய படங்களில் நடித்தார். ஊரு பிரஷிதா பையன், ஈடா போன்ற படங்களும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன. Footprints on Water என்ற ஆங்கில படத்திலும் நிமிஷா நடித்துள்ளார்.

கிரேட் இந்தியன் கிச்சன் மற்றும் சோழா ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான மாநில விருதையும் நிமிஷா பெற்றார். இதுவரை எந்த படத்திலும் நிமிஷா  மேக்கப் போட்டதில்லை, மேக்கப்பில் ஆர்வம் இல்லை என்று நிமிஷா கூறியது அப்போது பரவலாக பாராட்டப்பட்டது.

நிமிஷா சஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரம் கடற்கரைக் (பஞ்ச பாண்டவர்களின் ரதம்) கோயில்களில் இரண்டு நாட்களாக சுற்றி பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சேலை அணிந்து பாரம்பரிய தோற்றத்துடன் இந்த புகைப்படங்களில் நிமிஷா காட்சியளிக்கிறார்.

மாமல்லபுரம் & இதனை சுற்றியுள்ள கலைப்பொருட்கள் தயாரிப்பகத்தில் நிமிஷா சஜயன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.

பிஜு மேனன் நடித்த தென்னக தாலுகாசே தான் நிமிஷாவின் சமீபத்திய திரைப்படம்  ஆகும்.

நிமிஷாவின் அடுத்த படம் லிஜின் ஜோஸ் இயக்கும் சேரா. சேராவில் ரோஷன் மேத்யூ கதாநாயகனாக நடிக்கிறார்.

நிமிஷா & நிவின் பாலி நடிப்பில் ராஜிவ் ரவி இயக்கத்தில் உருவாகியுள்ள துறைமுகம் படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

Also Read | கௌதம் & மஞ்சிமா திருமணம்.. நெகிழ்ச்சியான தருணங்கள் அடங்கிய கல்யாண வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Nimisha sajayan visit mahabalipuram viral photos

People looking for online information on Mahabalipuram, Nimisha Sajayan, Nimisha sajayan visit mahabalipuram will find this news story useful.