நிக்கி கல்ராணி பிறந்தநாள் கொண்டாட்டம்.. குடும்பத்துடன் சேர்ந்து வெளியிட்ட சூப்பர் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நிக்கி கல்ராணி தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | வந்துட்டான்யா வந்துட்டான்யா.. பிரபல OTT-யில் ரிலீஸாகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.. எப்போ?

நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி திருமணம் கடந்த ஆண்டு மே மாதம் (19.05.2022) கோலாகலமாக நடை பெற்றது.  முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி இவர்களுக்கு நிச்சயம் ஆனது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஆதி பினிசெட்டி, தமிழில் ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே போல தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார்.

கடைசியாக, அவரது நடிப்பில் உருவாகி இருந்த 'கிளாப்' திரைப்படம், நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. கடைசியாக இவர் வாரியர் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.

அதே போல் நடிகை நிக்கி கல்ராணி, ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான 'டார்லிங்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தார். பின், கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு 2, மரகத நாணயம், சார்லி சாப்ளின்-2 உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

நிக்கி கல்ராணி மற்றும் ஆதி ஆகியோர் இணைந்து, மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு தம்பதியர் தங்களது திருமணத்தின் 100வது நாளை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் கொண்டாடினர். இந்நிலையில் நிக்கி கல்ராணி கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, தனது 31-வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு பிறந்தநாளில் வாழ்த்தியவர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

Also Read | "துணிவு படத்தில் இதை எல்லாம் எதிர்பாருங்க".. நடிகை மஞ்சு வாரியர் EXCLUSIVE!

தொடர்புடைய இணைப்புகள்

Nikki Galrani Birthday Celebration with Family and Friends

People looking for online information on Aadi, Nikki Galrani, Nikki Galrani Birthday Celebration will find this news story useful.