பரபரப்பு!!.. "கபோர்ட்ல ஒளிஞ்சுகிட்டேன்!".. துப்பாக்கி முனையில் நடிகையிடம் ரூ.7 லட்சம் கொள்ளை!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகை நிகிதா ராவலிடம் இருந்து துப்பாக்கி முனையில் 7 முதல் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மும்பையைச் சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகரும் நடனக் கலைஞருமான நிகிதா ராவல் பாலிவுட் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் வல்லவர். அனில் கபூருடன் இணைந்து இவர் பிளாக் அண்ட் ஒயிட் எனும் படத்தில் நடித்து இருக்கிறார். தென்னிந்திய நடிகையாக பிரபலமாக பேசப்பட்ட இவர் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் தெலுங்கில் நடித்திருக்கிறார். இதுவரை 8 விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறார்.

இந்நிலையில்தான் டெல்லி சாஸ்திரி நகரில் உள்ள, தனக்கு சொந்தமான வீட்டில், படப்பிடிப்பை முடித்துவிட்டு நிகிதா தங்கிய போது அவரிடம் துப்பாக்கியை காட்டி நகை, பணத்தை சிலர் கொள்ளையடித்துக் கொண்டதாகவும், தான் இப்போது உயிருடன் இருப்பதையே தன்னால் நம்ப முடியவில்லை என்றும் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

4 பேர் கொண்ட அந்த கும்பல் தன்னிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகைகளை கேட்டதாகவும், அப்போது வீட்டுக்குள் இருந்த பணம், நகைகளை அவர்களிடம் கொடுத்துவிட்டு, தன்னை காப்பாற்றிக்கொள்ள கபோர்டில் ஒளிந்து கொண்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் நிகிதா.

காரணம் அவர்கள் கேட்டதை கொடுத்து விட்டாலும் கூட, தன்னை கொன்று விடுவார்களோ அல்லது தன்னை பலாத்காரம் செய்து விடுவார்களோ என்கிற அச்சம் தனக்கு இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். அந்த வீட்டில் தனியாக இருப்பது அத்தனை பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்து அடுத்த நாளே மும்பைக்குச் சென்று விட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்த நிகிதா, இது குறித்து யாரிடமாவது பேசுவதற்கு கூட அச்சமாக இருப்பதாகவும், சில நிகழ்ச்சிகளுக்காக தனக்கு வந்த முன்பணத்தை இந்த கொள்ளையர்களிடம் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Also Read: "கொலை மிரட்டல் விடுத்த Ex காதலன்.. ஆசிட் ஊத்த ஆள் அனுப்பினாரு!".. BiggBoss நடிகை பரபரப்பு புகார்!

தொடர்புடைய இணைப்புகள்

Nikita Rawal lost 10 lakh to robbers hide in cupboard

People looking for online information on Nikita Rawal will find this news story useful.