"அந்த மனசுதான் சார் கடவுள்!".. ஆதரவற்றோருடன் பிறந்த நாளை கொண்டாடிய ‘நேஷனல் க்ரஷ்’ நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தமது பிறந்த நாளை கொண்டாடி நெகிழ வைத்துள்ளார் 'நேஷனல் க்ரஷ்' நடிகை நிதி அகர்வால்.

nidhhi agerwal celebrates birthday at old age home heartwarming

ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ திரைப்படத்திலும், சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை நிதி அகர்வால். ரசிகர்களால் நேஷனல் க்ரஷ் என அன்போடு அழைக்கப்படுகிறார். 

nidhhi agerwal celebrates birthday at old age home heartwarming

இந்நிலையில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நிதி அகர்வாலுக்கு 28 வது பிறந்த தினம் என்பதால் இதனை கொண்டாடும் விதமாக ஆதரவற்ற முதியோர் இல்லம் சென்று அவர்களுடன் உற்சாகமுடன் பேசி கைக்குலுக்கி மகிழ்ந்து, அங்கு கேக் வெட்டி தமது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

அதுமட்டுமின்றி அங்கு வாழும் முதியோர்களுக்கும், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கும் உணவு பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிதி அகர்வாலின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தற்போது நிதி அகர்வால், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதேபோல், பவன் கல்யாண் நடிக்கும் வீரமல்லு திரைப்படத்தில் நாயகியாக பஞ்சமி எனும்  கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் போஸ்டர் நேற்றைய தினம் வெளியானது. இதை பகிர்ந்த நிதி அகர்வால், அதை தமது பிறந்த நாள் பரிசு என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் தான், நடிகை நிதி அகர்வால் தமது பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் வைத்து கொண்டாடியதற்காக அவருக்கு ரசிகர்களிடத்தில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.முன்னதாக நடிகை நிதி அகர்வாலுக்கு சென்னையில் சில ரசிகர்கள் சிலை வைத்து பாலாபிஷேகமே செய்து வைரல் ஆகியது குறிப்பிடத்தக்கது. 

Also Read: "செம்ம.. மாஸ்".. புதிய திரைப்படத்தில் நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை.. Viral ஆகும் Shooting ஃபோட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Nidhhi agerwal celebrates birthday at old age home heartwarming

People looking for online information on National crush, Nidhhi Agerwal, Trending, Viral will find this news story useful.