பிக்பாஸ் வீட்டில் புதிய டாஸ்க் அறிவிக்கப்பட்டது. இதுவரைக்கும் கடந்த 50 நாட்களில் எந்த விஷயங்களை மக்கள் சரியாகப் புரிந்து இருக்க மாட்டார்கள் என்று ஒரு பிக்பாஸ் போட்டியாளர் நினைக்கிறாரோ, அந்த விஷயங்களை மக்களுக்கு அவரே வெளிப்படையாகச் சொல்லலாம்.
இப்படி பிக்பாஸ் வீட்டில் நடக்கும் விஷயங்களை மக்களுக்கு ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் காட்ட, அவர்களுக்கு கிடைத்த வாய்ப்புதான் இந்த வார லக்ஜூடி பட்ஜெட் டாஸ்க். இதில் 2 பிரேக்கிங் நியூஸ் அணிகளாக பிரியவேண்டும். இரண்டு அணிகளும் இரண்டு செய்தி சேனலாக செயல்பட வேண்டும்.
ஒன்று பிக்பாஸ் ரெட் டிவி அணி மற்றொன்று ப்ளூ டிவி அணி. ஒவ்வொரு சேனல்களிலும் இரண்டு பத்திரிகையாளர்கள் மற்றும் இரண்டு செய்தி தொகுப்பாளர்கள் இருக்க வேண்டும். இதில் ஒரு போட்டியாளர் சேகரிக்கும் செய்திகள் எதிரணிக்கு சம்பந்தப்பட்ட செய்திகளாக இருக்க வேண்டும். இந்த கதைகளை எடுக்கும்போது கதைக்கு சம்பந்தப்பட்ட நபரை நேர்காணல் செய்து அவர்களிடம் கேள்விகளை கேட்டு பின் சேகரித்த தகவல்களை செய்தி தொகுப்பாளர்களிடம் கள ரிப்போர்ட்டர் கொடுக்க வேண்டும்.
தொகுப்பாளரின் வேலை, தொகுப்பாளர்களிடம் செய்தி வாசிப்பாளர்கள் செய்திகள் தரும் பொழுது அந்த செய்திகளை தொகுத்து வழங்குவார்கள். ஒரு சேனல் ஒரு பிரைம் டைமிற்கு குறைந்தது மூன்று செய்திகளைத் தொகுத்து வழங்க வேண்டும். சஞ்சீவ் இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக செயல்படுவார். நாள் முழுவதும் நடந்த செய்திகளின் தொகுப்பை வைத்து சேனல்களின் டிஆர்பியை ஹவுஸ் மேட்ஸ்க்கு சஞ்சீவ் தெரிவிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிரூப் மற்றும் இமான் அண்ணாச்சி இருவரையும் அமரவைத்து, அபிஷேக், சிபி மற்றும்ன் பிரியங்கா மூவரும் ரெட் டிவிக்காக நியூஸ் டிபேட் நடத்தினர். அப்போது, நிரூப், அந்த காயினை பயன்படுத்தியதற்கு காரணம் அந்த காயினுக்கான வேலிடிட்டி 2 வாரத்தில் முடிவடைகிறது என்பதுதான் என்றார்.
இதேபோல் இமான் அண்ணாச்சி பேசும்போது, “5 நிமிடத்துக்கு முன்புவரை யார் வேண்டுமானாலும் கேப்டன் ஆவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறிய நிரூப் பின்னர், காயினை பயன்படுத்தி கேப்டன் ஆனது ஏன்?” என்பதுதான் என் கேள்வி என்று கூறினார்.
மேலும் பிரியங்கா நிரூப்பிடம், “நீங்க ஏற்கனவே டவுனாக இருக்கும்போது, உங்களை இன்னும் அந்த இடத்துக்கு தள்ளிய நபர்கள் யார்?” என்று பிரியங்கா கேட்கிறார். இதற்கு பதில் அளித்த நிரூப், “அது ஒருத்தர் தான், அது அண்ணாச்சிதான்!” என பதில் கூறுகிறார்.
அதற்கு மீண்டும் அண்ணாச்சி, “நிரூப் ஏற்கனவே வலியில் இருக்கும்போது, நான் அந்த வலியை அதிகப்படுத்தும் அளவுக்கு, நான் என்ன அவ்வாறு நடந்துகொண்டேன் என்பதை கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?” என்று கேட்டார். அதற்கு அபிஷேக், “நியூஸை கலெக்ட் செய்து தருவது மட்டும்தான் எங்கள் ரிப்போர்ட்டர் பிரியங்காவின் வேலை” என்று சொல்கிறார்.
அபிஷேக்கின் இந்த பதிலால் இன்னும் டென்ஷன் ஆன அண்ணாச்சி, “ஒரு நிகழ்ச்சிக்கு கூப்பிடுவீங்க, உங்க சேனலை மதிச்சு வந்தா, இல்லாத ஒன்னை இருப்பதாக காட்டி நம்பவைத்து மக்களை குழப்புகிறீர்கள். இதனை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்!” என கூறிவிட்டு அங்கிருந்து கும்பிடு போட்டு சென்றுவிட்டார்.