பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் ஒரு மறக்கமுடியாத சம்பவம் குறித்து பதிவிட்டுள்ளார்.
சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர் அனிதா சம்பத். இவரின் தமிழ் மொழி உச்சரிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர் சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து இவர் அண்மையில் எமர்ஜென்சி எனும் வெப் தொடரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நிகழ்வை பற்றி பகிர்ந்துள்ளார். கவிஞர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் நேற்று காலமானார். இதையடுத்து அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் பதிவில், அனிதா சம்பத் அவரை பற்றிய ஒரு நிகழ்வை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர், ''1982ல் என் தந்தை adyar film instituteல் ..D.F.Tech in film direction பயின்ற போது, மன்னர் மன்னன் அவர்களிடம் கதை ஒன்றை சொன்னாராம். அதை கேட்டு மிகவும் பாராட்டி.. கல்லூரி term கட்டணத்தை உதவியாக இலவசமாக கட்டி இருக்கிறார்.இதை இப்போது தான் அப்பா சொல்கிறார்..சர்வ சாதாரணமாக.. பாரதிதாசனின் கவிதைகளை குழந்தையில் இருந்து படிக்கிறோம்..அவர் மகன் என் அப்பாவுக்கு கல்விக் கட்டணம் கட்டியிருப்பது வியப்போடு பெருமையாகவும் உள்ளது'' என பதிவிட்டுள்ளார்.