Trend Loud India Digital மற்றும் இயக்குநர் பாலாஜி மோகனின் Open Window நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய வெப்சீரிஸ் தொடருக்கான பூஜை இன்று தொடங்கியது.
நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலாஜி மோகன், காதல் ட்ராமா ரொமாண்டிக் காட்சிகள் நிறைந்த 'காதலில் சொதப்புவது எப்படி படத்தினை இயக்கி வெள்ளித்திரையில் வெற்றியும் கண்டார். இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் இன்றளவும் இளைஞர்களை கவரும் விதமாகவே இருக்கிறது.
அதேபோன்று தனுஷை வைத்து மாரி, மாரி 2 படங்களை இயக்கியிருந்தார். வடசென்னை ரவுடி கதாபாத்திரத்தில் அராத்து செய்து முதன்முறையாக தனுஷ் நடித்திருந்த மாரி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கைதட்டல்களை பெற்றது. தனுஷ் கெட்டப் பார்க்க வில்லத்தனமான நல்லவன் என்ற பேச்சும் ரசிக்கும்படி அமைந்தன. தமிழ்நாட்டை விட கேரள ரசிகர்கள் பெருமளவு ரசித்தனர். இயக்குநராக இருந்த பாலாஜி தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.
இந்நிலையில், Trend Loud India Digital இயக்குநர் பாலாஜி மோகனின் Open Window நிறுவனங்கள் இணைந்து தங்களது இரண்டாவது படைப்பை அறிவித்துள்ளன. பாலாஜி மோகனிடம் உதவி இயக்குநராக இருந்த விக்னேஷ் விஜயகுமார் வெப் சீரிஸ் தொடர் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
மக்களை ரசிக்கும் விதமாக காமெடி, டிராமாவாக விக்னேஷ் விஜயகுமார் எழுத்து இயக்குகிறார். இத்தொடரில் பிரசன்னா, SPB சரண், தன்யா பாலகிருஷ்ணா, கனிகா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் முக்கிய பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். சென்னையில் இத்தொடருக்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் பிரசன்னா, பாலாஜி மோகன், எஸ்பிபி சரண், தன்யா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இத்தொடரின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. பிப்ரவரி 2022 இத்தொடரின் படப்பிடிப்பு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரியேட்டிவ் புரடியூசராக பாலாஜிமோகன் பணியாற்ற, ராஜா ராமமூர்த்தி இத்தொடரை தயாரிக்கிறார். சஞ்சய் சுபாஷ் மற்றும் வித்யா சுகுமாரன் இணை தயாரிப்பு செய்கின்றனர்.