பிக்பாஸ் வீட்டின் RULES உடைக்கப்பட்டதா..?!! அர்ச்சனா - சோம் மீது குற்றச்சாட்டு.. வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டின் விதிமுறைகளை அர்ச்சனா - சோம் ஆகியோர் மீறியதாக புதிய வீடியோ வைரல் அடித்து வருகிறது. 

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி தற்போது ரசிகர்களின் வரவேற்புடன் ஹிட் அடித்து வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள பல்வேறு போட்டியாளர்களுக்கும் தனித்தனியே ஃபேன் பேஜ்கள் கூட உருவாகயிருக்கின்றன. மேலும் போட்டியாளர்களின் நடவடிக்கைகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியில் இருந்து புதிய வீடியோ இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. இதில் அர்ச்சனா தனது கைகளால் மைக்கை மூடிக்கொண்டு பேசுவது போலவும், அனிதா வந்த பிறகு, அவரும் சோம்-மும் மைக்கை மீண்டும் மாட்டி கொள்வது போலவும் காட்டப்படுகிறது. 

இந்த வீடியோ வைரல் ஆகி வருவதுடன், இதை பார்த்த நெட்டிசன்ஸ், ''இது பிக்பாஸ் வீட்டின் விதிமுறைகளை மீறுவதாகவும், இதற்கு கமல் ஆக்‌ஷன் எடுக்க வேண்டும்'' எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவில் வருவது போல அவர்கள் ரூல்ஸை மீறினார்களா..? அல்லது உண்மை என்ன..? என்பது அடுத்துவரும் நாட்களில் தெரிந்துவிடுமா பார்க்கலாம்.!!

 

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் ரூல்ஸ் உடைக்கப்பட்டதா | New video goes viral ft archana and som breaking biggboss house rules

People looking for online information on Archana, BiggBoss 4, Som will find this news story useful.