வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு! சிம்பு வெளியிட்ட மாநாடு படத்தின் புதிய SUPER வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வெங்கட்பிரபு, சிம்புவை வைத்து 'மாநாடு' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

new video from manaadu movie released by silamabrasan TR

இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம் ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் எடிட்டிங்கை பிரவின் K.L கையாள்கிறார்.

new video from manaadu movie released by silamabrasan TR

இந்த படத்தின் போஸ்டர், முன்னோட்டம், முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் டிரெய்லர் நான்கு மொழிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று வெளியானது. வெளியானது முதலே டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. குறிப்பாக படத்தில் S. J சூர்யா பேசும் வசனமான வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு வசனம் நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைதளங்களில் பல மீமாக சுற்றுகிறது. 

இந்நிலையில் படத்தின் டிரெய்லருக்கான டப்பிங்கின் போது எடுத்த வீடியோவை சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் சிம்பு டப்பிங் பேசும் காட்சிகளும், இயக்குனர் வெங்கட்பிரபு - சிம்பு பேசும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

New video from manaadu movie released by silamabrasan TR

People looking for online information on S J Suryah, Silambarasan TR, Venkat Prabhu, Yuvan Shankar Raja will find this news story useful.