உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பல துறை சார்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தியேட்டர்கள் மூடப்பட்டு சினிமா துறையில் இருப்பவர்களும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. தியேட்டர்கள் திறக்க படுவதற்கான ஆயத்த வேளைகளில் இறங்க அரசு அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதுபற்றி கூறிய திருப்பூர் சுப்ரமணியன் " தமிழக அரசு சினிமா தியேட்டர்களை ரெடி செய்து வைக்க அனுமதி அளித்துள்ளனர். இதேபோலதான் முன்பு பேருந்துகளை தயார் செய்யும்படி அரசு அறிவித்தது. பின்பு 15 நாட்களில் பேருந்துகள் இயங்க அனுமதி அளித்தது. அதேபோல திரையரங்குகளையும் 10 நாட்களில் திறக்க வாய்ப்புகள் இருக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.