ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு முகம்..! - பிக் பாஸ் 3-ல் யாருடைய முகத்தை பார்க்கலாம்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3-க்கான புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதையடுத்து முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனும் ஒளிபரப்பானது. இரு சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனின் சில புரொமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிரச் செய்துள்ளன.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வரும் ஜூன்.23ம் தேதி திங்கள் முதல் ஞாயிறு வரை ஒளிபரப்பாகும் என அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, இந்நிகழ்ச்சியின் புதிய புரொமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்த சீசனில் 60 கேமராக்களுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் 100 நாட்கள் வசிக்கப்போகும் 15 போட்டியாளர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

New Promo Video of Kamal Haasan hosting Bigg Boss 3 has been released

People looking for online information on Bigg Boss 3, Bigg Boss Promo, Kamal Haasan will find this news story useful.