இனி ஹாயா பாட்டு பார்த்து ரசிக்க, தமிழில் மேலும் ஒரு மியூசிக் சேனல்.!! - எப்போ ஆரம்பம்.?!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் மேலும் ஒரு இசை சேனல் தொடங்குவது பற்றிய தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. 

இசை எப்போதுமே மனிதர்களின் வாழ்வில் கலந்து ஒன்று. சோகமானாலும் சரி., கோபமானாலும் சரி., நல்ல இசை எப்போதுமே நமது உணர்வுகளில் கலந்தவை. அப்படி தமிழ் சினிமா ரசிகர்களையும் பாடல்களையும் எப்போதுமே பிரித்துவிட இயலாது. திருவிழா கச்சேரிகளில் இருந்து எலைட் கல்யாணங்கள் வரையிலும், பாடல்கள் இல்லாமல் எந்த கொண்டாட்டமும் இல்லை. 

இப்போது தமிழில் புதிதாக மேலும் ஒரு இசை சார்ந்த சேனல் தொடங்கப்படவுள்ளது குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. விஜய் மியூசிக் என பெயரிடப்பட்டுள்ள சேனல், முழுக்க முழுக்க பாடல்களை மட்டுமே ஒளிபரப்பவுள்ளதாம். விஜய் குழுமத்தின் சேனல்களில் இது புதிதாக இணையவிருக்கிறது. மேலும் அக்டோபர் 4 முதல் இந்த சேனல் ஒளிபரப்பு துவங்கும் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

தமிழில் புதிதாக ஒரு மியூசிக் சேனல் | New music channel to be launched in tamil on this date

People looking for online information on Vijay Music will find this news story useful.