நடிகர் சசிகுமார் அடுத்து நடிக்கும் புதிய படம்! இயக்குனர் யார் தெரியுமா? செம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தீபாவளிக்கு நவம்பர் 4-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் சசிக்குமார் நடித்த எம்ஜியார் மகன் படம் பீரிமியராக வெளியானது.

New film directed by Marimuthu and starring Sasikumar
Advertising
>
Advertising

வரும் நவம்பர்-26 அன்று சசிகுமார், நிக்கி கல்ராணி, யோகிபாபு நடிப்பில் ராஜவம்சம் படம் திரையரங்குகளில் வருகிறது, இதனையடுத்து  நடிகர் சசிகுமார் நடிப்பில் ‘தொரட்டி’ பட இயக்குனர் மாரிமுத்து இயக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது

New film directed by Marimuthu and starring Sasikumar

தனது யதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சசிகுமார். தற்போது பலரின் பாராட்டையும், சர்வதேச விருதுகளையும் பெற்ற ‘தொரட்டி’ படத்தின் இயக்குனர் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் நடிக்கின்றார். Standard Entertainments சார்பாக G.M.டேவிட் ராஜ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம்.C.S இசையமைக்கிறார்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. தேனி, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் G.M.டேவிட் ராஜ் கூறினார்.

Tags : Sasi Kumar

மற்ற செய்திகள்

New film directed by Marimuthu and starring Sasikumar

People looking for online information on Sasi Kumar will find this news story useful.