நயன்தாராவின் 'நெற்றிக்கண்'.. மிரட்டுதே!".. வெளியான த்ரில் 'ட்ரைலர்'.. படம் எப்போ ரிலீஸ் ? VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடித்திருக்கும் திரைப்படம் ‘நெற்றிக்கண்’.

இயக்குனர் விக்னேஷ் சிவன் தங்களது ரவுடி பிக்சர்ஸின் கீழ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா, பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கிறார். நடிகை, நயன்தாரா பார்வை மாற்றுத் திறனாளியாக இருக்கும்போதிலும், சீரியல் கொலைகாரன் ஒருவனை சரியாக கண்டுபிடிப்பதுதான் இந்தப்படத்தின் ஒன்லைன் என்பது டிரைலரில் இருந்து தெரிகிறது.

ஆம், இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. மிரட்டலான இந்த டிரைலரில் இருந்து, நயன்தாரா, நானும் ரவுடிதான் படத்துக்கு பிறகு இன்னுமொரு மைல்கல்லை இந்த படத்தில் அடைந்திருக்கிறார் என்பது தெரிகிறது.

நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நயன்தாரா காது கேள இயலாதவராக நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் பார்வை மாற்றுத்திறனாளியாக நடிப்பில் அசர வைக்கிறார். அதே சமயம் தன்னுடைய அறிவால் எதையும் சாதிக்கும் ஒரு பெண்ணாகவும் அவரது கேரக்டர் தெரிகிறது.

இதேபோல் அஜ்மல் அமீர் முக்கிய வில்லனாக நடித்திருப்பது தெரிகிறது. நிச்சயம் இந்த படத்தில் அஜ்மலின் நடிப்பு பாராட்டை குவிக்கும் என்பதும் தெரிகிறது.

ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஆகஸ்டு 13-ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் ட்ரைய்லர் பலரையும் கவர்ந்து வருகிறது.

முன்னதாக தனுஷ் , நயன்தாரா நடிப்பில் யாரடி நீ மோகினி படத்தை மிலிந்த் ராவ் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நயன்தாரா நடிப்பில் இந்த திரைப்படத்தை  மிலிந்த் ராவ் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ட்ரைலர் வெளியானதிலிருந்து அதிகரித்துள்ளது என்று சொல்லலாம்.

ALSO READ: டி.இமான் இசையில் "அரவிந்த் சுவாமி" நடிக்கும் படத்தின் செம்ம அப்டேட்! என்ன படம் தெரியுமா?

தொடர்புடைய இணைப்புகள்

Netrikann Trailer Nayanthara Milind Rau Vignesh shivan

People looking for online information on Ajmal Ameer, Nayanthara, Netrikann will find this news story useful.