பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடரில் வெளியான ஒரு காட்சிதான் தற்போது இணையத்தில் செம்மயாக ட்ரெண்ட் ஆகி வருகிறது.
மைக்கேல் ஜாக்சன்
பிளாஸ்டிக் சர்ஜரி என்ற வார்த்தை உலகளவில் அனைவரும் அறியக் காரணமாக இருந்தது மைக்கல் ஜாக்சன். பலமுறை தனது முகத் தோற்றத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றியமைத்து கொண்டார் . இதனால், நாள்பட அவருக்கு சரும கோளாறுகளும், அழற்சிகளும் உண்டாக ஆரம்பித்ததாக கூறப்படுவது உண்டு.
பிளாஸ்டிக் சர்ஜரி
பிளாஸ்டிக் சர்ஜரி எனும் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை என்றதும், இது அழகுக்கான சிகிச்சை என்று எண்ணிவிட வேண்டாம். பிளாஸ்டிக் சர்ஜரி என்ற தவறான கருத்தே பரவலாக இருக்கிறது. கைகளில் ஏற்படும் காயங்கள், தீக்காயங்கள் பிறவிக் குறைபாடுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சை ஒரு வரப்பிரசாதம். சினிமாவில் அறிமுகம் ஆன பின்பு முக அழகை மாற்றிக்கொண்ட நடிகைகளும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.
வாவ்... இவங்களுக்கு இப்படி ஒரு திறமையா! கடலுக்கு அடியில் நிக்கி கல்ராணி
சீரியல்
பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சையை மாபெரும் மருத்துவ புரட்சியாக மட்டுமே பார்க்க முடிகிறது. இப்படி உலக திரையுலகிலேயே மிரள வைத்த பிளாஸ்டிக் சர்ஜரியை எந்த சினிமாவிலும் முழுமையான நுணுக்கங்களுடன் காட்டியதில்லை என்றாலும் சினிமாவுக்கு தகுந்தாற்போல் பல திரைப்படங்கள் காட்டியுள்ளன.
ரோஜா சீரியல்
தமிழ் தொலைக்காட்சி சீரியல்களிலும் தற்போது சினிமாவை மிஞ்சும் அளவிற்கு சில காட்சிகள் கட்டமைக்கப்பட தொடங்கியுள்ளதை காண முடிகிறது. அந்த வகையில் சன்.டி.வியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான ரோஜா சீரியலில், நாயகி ரோஜாவை கொல்வதற்கு, வில்லி கதாபாத்திரமான அனு முயற்சி செய்கிறார். இதை அறிந்து கொண்ட ரோஜாவும், நாயகன் அர்ஜூனும், இவர்களது குடும்பமும் அனுவை சிறைக்கு அனுப்ப ஒரு திட்டம் தீட்டினர்.
“இனி பாவனி என்ன கழட்டி விட்ருவா!”.. BB வீட்டுக்குள் வந்த Ex போட்டியாளர்களால் குமுறும் அமீர்!
அதன்படி அனுவின் துப்பாக்கியில் போலியான தோட்டாவை போட்டு விட்டுகின்றனர். ரோஜா இறந்தது போல் அனுவை நம்பவைத்துள்ளனர். அனுவும் தான் ரோஜாவை கொன்றுவிட்டதாக நம்பியுள்ளார். அதன் பின் ரோஜா பேய் போல் வேடம் அணிந்துவந்து அனுவை பயமுறுத்த, பயந்துபோன அனு, போலீஸாரிடத்திலும் அர்ஜூனிடத்தில் எல்லா உண்மைகளையும் வாக்குமூலமாக சொல்லி, தன்னை சிறையில் இருந்து மீட்குமாறு கெஞ்சுகிறார்.
உலக படங்களுக்கே டஃப்
இதில், ரோஜா இறந்துவிட்டதாக அனுவை நம்ப வைக்க வேறொரு பெண்ணின் சடலத்தை எடுத்து வந்து, அவர் முகத்தில் ஒரு பொம்மை முகமூடியை வைத்து ஒத்தி எடுக்கிறர்கள். அவரின் முகம் ரோஜா முகமாகவே மாறுகிறது. இது என்ன டெக்னாலஜி என தெரியவில்லை என்றாலும் இதைப் பார்த்த இணையவாசிகள் face off, predestination போன்ற படங்களுக்கு டஃப் கொடுக்கும் காட்சிகள் ரோஜா சீரியலில் இடம் பெறுகிறதே என கூறி ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.