கோழி-நரி டாஸ்க்கை பார்த்து கலாய்த்தவர்கள் கூட இன்றைய டாஸ்க்கை பார்த்து இதற்கு அதுவே பரவாயில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர். பிவிசி பைப் ஒன்றை வைத்து அதற்குள் வரும் பந்துகளை பிடிக்க வேண்டும். பாலின் சைஸுக்கு ஏற்றவாறு பாயிண்ட்ஸ் கிடைக்கும் என்பது தான் பால் கேட்ச் டாஸ்க்கின் விதி (ரீசண்டா பிக்பாஸ் தூள் படம் பார்த்து இருப்பாரு போல)
இதில் போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை வைத்து அதற்கு ஏற்றவாறு பிக்பாஸ் விதிகளை மாற்றிக்கொண்டே இருந்தார். ஆரி, ரியோ, அனிதா, ஷிவானி உள்ளிட்டோர் இதற்காக தரையில் அங்கப்பிரதட்சணம் எல்லாம் செய்தனர். இதைப்பார்த்த நெட்டிசன்கள் உக்கிரமா டாஸ்க் கொடுக்க சொன்னா, இப்படி மொக்கையா குடுத்து வச்சு இருக்கீங்க என கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். நல்லா குடுக்குறாங்க டாஸ்க்கு!
Tags : Bigg Boss 4 Tamil