போலிஷ் மொழியில் வெளியான திரில்லர் - 365 டேய்ஸ். தற்போது நெட்ஃபிக்ஸ் இந்தியாவில் இதுதான் முதலிடத்தில் உள்ள படம். மேலும், ட்விட்டர்வாசிகள் மற்றும் திரை ஆர்வலர்கள் இதனை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
மாஃபியா கேங்க் தலைவன் மாசிமோ (மைக்கேல் மோரோன்) மற்றும் கார்ப்பரெட் கம்பெனியில் வேலை செய்யும் லாரா (அன்னா மரியா சீக்லூக்கா) இந்த இருவருக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களில் தெறித்த அதீத வன்முறை, கடத்தல், பின்தொடர்தல், கட்டாய உறவு போன்றவை பார்யாளர்களில் பலருக்கு ஆசூசையான உணர்வினை ஏற்படுத்தியுள்ளது!
சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வில், " 365 டேஸ் தொடர் மிகவும் பொய்யாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கற்பழிப்பு கடத்தல் உள்ளிட்ட க்ரைம்களை அழகியல்ரீதியாக காட்சிப்படுத்துவது அபத்தம். இது மிகவும் எரிச்சலூட்டுவதாகும். மேலும் ஒருவர் ரேப் செய்யப்படும்போது அந்த வலியை புறக்கணித்து, அதில் இன்பம் அனுபவிப்பதைப் போல இதில் காட்சிப்படுத்தப்படுவது நிச்சயம் தவறு’ என்று கூறியுள்ளது.
"இந்த திரைப்படத்தைப் பற்றி நீங்கள் இதுவரை கேள்விப்படாவிட்டால், இனி நிச்சயம் கேள்விப்படுவீர்கள். இது தற்போது நெட்ஃபிக்ஸில் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் இதில் கடத்தல் மற்றும் கேஸ்லைட்டிங் ஆகியவற்றை கவர்ச்சியாகவும், காதல் போலவும் சித்தரிக்க முயற்சிக்கிறது" என்று ஒரு பயனர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"நெட்ஃபிக்ஸில் வெளியாகியுள்ள இந்த 365 டேஸ் திரைப்படம் 50 ஷேட்ஸ் ஆஃப் க்ரே போலுள்ளது. இதன் கதை அருவருப்பானது. ஒரு பெண்ணைக் கடத்துகிறான் ஒருவன். அவள் காதலிக்கும் வரை விடமாட்டான். அவளுடைய சம்மதம் இல்லாமலேயே அவளை தொடுகிறான். இதன் பெயர்தான் "காதலா"? இதுவொரு குப்பைக் கதை என்று மற்றொருவர் ட்வீட் செய்துள்ளார்.