கடந்த முறை வேல்முருகன் வெளியேற்றப்பட்டதை கமல் அறிவித்தபோது அவர் முன்பே சென்று பாலாஜி, ஆஜீத்தை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். இதைக்கண்ட நெட்டிசன்கள் அவரை கண்டபடி வறுத்தனர். இந்த நிலையில் மீண்டும் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. நேற்று சம்யுக்தா காப்பாற்றப்பட்டதை அறிந்த சக போட்டியாளர்கள் அவரை சுசித்ரா வெளியேறும் முன்பே கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் இந்த சீசனில் தான் முதல்முறையாக இப்படி செய்கின்றனர் என சக போட்டியாளர்களை வறுத்தெடுத்து வருகின்றனர். அதே நேரம் ஆரி, சனம், அனிதா, பாலாஜி மட்டுமே வீட்டைவிட்டு வெளியேறும் வரை சுச்சிக்கு ஆறுதலாக நின்றனர். பிக்பாஸ் வீட்டுக்குள் இப்படியும் சில பேர் இருப்பது மகிழ்ச்சி என அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Tags : Bigg Boss 4 Tamil