நேற்று திடீரென பிக்பாஸ்க்கு ஒரு டெரர் ஐடியா வந்தது. இந்த 60 நாட்களில் போட்டியாளர்கள் டாஸ்க் தவிர என்ன செய்தனர் என்று அவர்கள் வாயாலேயே சொல்ல வைப்பது தான் அது. ஆனால் இதை பொதுவில் அறிவிக்காமல் ஒருவர் பின் ஒருவராக அழைத்து தன்னுடைய ராஜதந்திரத்தை காட்டினார். அதிலும் இதை வெளியில் சொல்லக்கூடாது என்ற கண்டிஷனுடன்.
இதில் சிக்கியவர்கள் அனைவரையும் பாரபட்சம் பாராமல் சும்மா வச்சு செஞ்சு விட்டார். நிஷா தன்னுடைய பட்டிமன்ற பாணியில் பேச, நிப்பாட்டுங்க என கறார் காட்டினார். பின்னர் தன்னுடைய பங்களிப்பு குறித்து நிஷா நீண்ட உரையாற்ற என்ன பங்களிப்பு செஞ்சீங்க? கொஞ்சம் சொல்லுங்க என சுத்தலில் விட்டார். வெறுத்துப்போய் ஒருவழியாக வெளியே வந்தவரை ரமேஷ், ரம்யா உள்ளிட்டோர் ரவுண்டு கட்டினர்.
முதலில் கொரோனா டெஸ்ட் என பில்ட் அப் கொடுத்தவர் பின்னர் ரொம்ப அவமானமா போச்சு என உண்மையை சொன்னார். அதிலும் கொரோனா டெஸ்ட் எடுப்பதால் நைட்டி மாற்றிக்கொண்டு போகும்படி அர்ச்சனா சொல்லியதாக சொன்ன நிஷா, நைட்டியோட போயிருந்தா ரொம்ப அவமானமா போயிருக்கும் நல்ல வேளை என தன்னைத்தானே தேற்றிக்கொண்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.