நெட்ஃப்ளிக்ஸ் பயன்படுத்தும் பார்வையாளர்களுக்கு, அந்நிறுவனம் ஒரு முக்கியமான தகவலை தெரிவித்துள்ளது.
தற்போது தியேட்டர்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மூடப்பட்டுள்ளதால், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற OTT ப்ளாட்பார்ம்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் ரிலீஸ் செய்யும் திட்டத்திலும் திரைத்துறையினர் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தகவலை தெரிவித்துள்ளது. 'நெட்ஃப்ளிக்ஸில் சந்தா செலுத்தி சேர்ந்துவிட்டு, ஒரு வருடத்திற்கு மேலாக, எதையும் பார்க்காமல் இருப்பவர்கள், தொடர்ந்து உறுப்பினர்களாக நீடிப்பது குறித்து உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால், அப்படி In Active-ஆக இருக்கும் வாடிக்கையாளர்களின் சந்தா கேன்சல் செய்யப்படும்' என நெட்ஃப்ளிக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ' 2 வருடங்களுக்கு மேலாக நெட்ஃப்ளிக்ஸை பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கும் இதே நடவடிக்கை எடுக்கப்படும். இனி வரும் வாரங்களில் இதற்கான வேலைகள் தொடங்கபடவுள்ளது' தெரிவிக்கப்பட்டுள்ளது.