நடிகரா? இயக்குனரா? அரவிந்த் சுவாமிக்கு இயக்குனர் மணி ரத்னம் அளித்த பதில்! என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடசத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் அரவிந்த்சாமி, முதல் முறையாக இந்த ஆந்தாலஜி மூலம், இயக்குநராக மாறியுள்ளார்.

netflix navarasa aravind swamy rowthiram maniratnam

கோபத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள "ரௌத்திரம்" பகுதியை அவர்  இயக்கியுள்ளார். தனது அறிமுக இயக்கம் குறித்து, நடிகர், இயக்குநர் அரவிந்த்சாமி  கூறியதாவது...

netflix navarasa aravind swamy rowthiram maniratnam

90 களின் ஆரம்பத்தில் இருந்தே இயக்கத்தின் மீது எனக்கு அதிக ஆர்வம் இருந்து வந்தது. மணி சார் நவரசா குறித்து என்னுடன் பேசியபோது நான் அதில் பங்கேற்க முடியுமா, எனக் கேட்டார். நான் அவரிடம் இயக்குநராகவா அல்லது நடிகராகவா எனக் கேள்வி எழுப்பினேன். அது உன்னுடைய தேர்வு தான் என்று கூறிவிட்டார்.

netflix navarasa aravind swamy rowthiram maniratnam

இப்படித்தான் இயக்குநராக எனது பயணம் துவங்கியது. இயக்குநராக நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.  படைப்பை உருவாக்குவதில் எதைப் பற்றியும் எந்த சந்தேகமோ, தயக்கமோ, என்னிடம் சுத்தமாக இல்லை. பல ஆண்டுகளாக நான் பல திறமையான இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பணிபுரிந்ததது தான் அதற்கு காரணம். அவர்கள் தான் என் வழிகாட்டி. ஏதாவது செய்ய உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்கள் எப்பொழுதும் அது குறித்து, கவனித்து கற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும், மற்றும்  அதற்கான வாய்பு வரும் போது, தயங்காமல் ஏற்றுக்கொண்டு செய்து பார்க்க வேண்டும். அந்த வகையில் இப்படைப்பை உருவாக்கியது மிக மகிழ்ச்சியாக இருந்தது.

ஆந்தாலஜியில் கோபத்தை நான் தான்  தேர்ந்தெடுத்தேன் அதற்கு காரணம் வழக்கத்தை மீறி ஏதாவது செய்ய, கோபம் ஏற்றதாக இருக்குமென்று நினைத்தேன். ஒரு ஐடியா என்னுள் தோன்றியது. கோபம் கிடைத்தால், அதை முன்வைத்து ஒரு கதையை கூறலாம் என்று முடிவு செய்தேன். அது நிறைவுபெற்று,  இப்போது எனது படைப்பிற்கு  பாராட்டுக்கள் கிடைத்து வருவது,  மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்றார். 

Netflix  தளத்தில், தமிழில் வெளியாகியுள்ள "நவரசா" ஆந்தாலஜி தொடர்   ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. மனிதர்களின் அடிப்படை உணர்வுகளான 9 ரசங்களின்  அடிப்படையில் 9 குறுங்கதைகள் இதில் வெளிவந்துள்ளது.

"நவரசா" மனித  உணர்வுளான  கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு  ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும்  ஆந்தாலஜி திரைப்படம். தமிழின் 40 க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், ஆளுமைமிக்க இயக்குநர்கள் பங்களிப்பில், இந்தியாவின் மிக முக்கிய படைப்பாக, "நவரசா" உருவாகியுள்ளது.  Justickets  நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை  தயாரித்துள்ளனர்.  "நவரசா"  Netflix தளத்தில்   2021 ஆகஸ்ட் 6 அன்று, பிரத்தியேகமாக  190 நாடுகளில் வெளியாகியுள்ளது.

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 209 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள், இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள்  ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால், எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படத்தை  நிறுத்தி, ஃபார்வேட் செய்து,  எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Netflix navarasa aravind swamy rowthiram maniratnam

People looking for online information on Arvind Swami, Mani Ratnam, Navarasa, Navarasa Tamil will find this news story useful.