மணிரத்னம் இயக்கும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கல்கி எழுதிய வரலாற்று புனைவு நாவலான பொன்னியின் செல்வனை தழுவி உருவாகும் இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கார்த்திக் பிரபு, பார்த்திபன், ஐஷ்வர்யா ராய், ஐஷ்வர்யா லக்ஷ்மி,ரியாஸ் கான் என்று ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
