PHOTOS: கமலுக்கு அம்பேத்கர் - பெரியார் சிலைகளை பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்..! பின்னணி தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உதயநிதி ஸ்டாலின் - கமல்ஹாசன் சந்திப்பு நடந்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | Ponniyin Selvan: "Location அனுப்புங்க இளவரசி.." கார்த்தி ட்வீட்.. த்ரிஷாவின் செம பதில்..

கடந்த மே மாதம் 20 அன்று உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவித்த,  மற்றும் பாக்ஸ் ஆபிஸில் பெரும் ஹிட்டடித்த இந்தி திரைப்படமான 'ஆர்டிகள் 15' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் இணைந்து நடித்தனர்.

இப்படத்தின் கதையை அனுபவ் சின்ஹா, எழுதியுள்ளார். ஒளிப்பதிவு இயக்குனராக தினேஷ் கிருஷ்ணன் பணிச் செய்துள்ளார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார், இந்த படத்தை அருண் ராஜா காமராஜா இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு நடிகர் கமல்ஹாசன் நெஞ்சுக்கு நீதி படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இந்த சந்திப்பில்  “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் உடனிருந்தனர். அப்போது உதயநிதி ஸ்டாலின் கமலுக்கு ஈ.வெ.ரா & அம்பேத்கர் சிலைகளை பரிசாக அளித்தார். மேலும் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியின் நினைவாக உதயநிதிக்கு விக்ரம் படத்தின் ALL TIME RECORD போஸ்டரை பரிசாக வழங்கினார்.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோரை வைத்து லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தை இயக்கினார். ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. நடிகர் சூர்யா ரோலக்ஸ் எனும் பெயரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது. தமிழ்நாட்டில் பாகுபலி 2, மாஸ்டர், விஸ்வாசம், பிகில் படங்களின் சாதனையை விக்ரம் முறியடித்துள்ளது. இந்த வருடத்தில் வலிமை, KGF-2, பீஸ்ட் படங்களின் சாதனையையும் விக்ரம் முறியடித்துள்ளது. இந்த வருடம் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாகவும் விக்ரம் படம் அமைந்துள்ளது.

விக்ரம் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Also Read | பொன்னியின் செல்வன்' படத்தின் ஆடியோ உரிமம்.. 5 மொழிகளிலும் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

தொடர்புடைய இணைப்புகள்

Nenjuku Needhi team gifted statues of Ambedkar and Periyar to Kamal

People looking for online information on Ambedkar Statue, Gift, Kamal Haasan, Nenjuku Needhi team, Periyar Statue, Statue, Udhayanidhi Stalin will find this news story useful.