BEAST -ஐ அடுத்து #THALAIVAR169.. ட்விட்டரில் இயக்குனர் நெல்சன் செய்த தெறிக்கவிடும் செயல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உலகம் முழுவதும் ஏப்ரல் 13 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

Advertising
>
Advertising

Also Read | ஆஹா.. "விக்ரம்" படத்திற்காக இதுவரை இல்லாத அளவுக்கு வேற மாரி சம்பவம்.. வெளியான சூப்பர் தகவல்

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, பிற ரோல்களில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பீஸ்ட் படம் ரசிகர்களிடம் கனிசமான வரவேற்பையும், கலவையான விமர்சனங்களையும் பெற்று ஓடி வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு சில நாட்களுக்கு முன் நெல்சனுக்கு கிடைத்தது.

அனிருத் இசையில், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, கலை இயக்குனர் கிரண், உடையலங்காரம் - பல்லவி ஆகியோர் பணிபுரிய இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினி, சன்பிக்சர்ஸ் உடன் நான்காவது முறையாக இணைகின்றார். இதற்கு முன் எந்திரன், பேட்ட, அண்ணாத்த ஆகிய படங்களை சன்பிக்சர்ஸ், நடிகர் ரஜினி நடிப்பில் தயாரித்துள்ளனர்.

இச்சூழலில் இயக்குனர் நெல்சன், தான் அடுத்து இயக்கப்போகும் படம், இதுவரை இயக்கிய படங்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். அந்த பட வரிசையில் தலைவர் 169 என்று குறிப்பிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பர் மாதம் துவங்கும் என்று தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் இந்த புதிய படத்திற்காக சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்திற்கு மேக்கப் லுக் டெஸ்ட் நடந்து விட்டதாக நம்பத்தகுந்த வட்டாராங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் கடந்த ஆண்டு (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தில் லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்து இருந்தனர்.

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.  இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்தனர். டி.இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் கனிசமான வரவேற்பை பெற்றுள்ளது. தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read | SK20 பட தயாரிப்பாளர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்.. சிவகார்த்திகேயனின் உருக்கமான Post

தொடர்புடைய இணைப்புகள்

Nelson super Star Rajinikanth Thalaivar 169 Latest Update

People looking for online information on Nelson Dilipkumar, Super Star Rajinikanth, Thalaivar 169, Thalaivar 169 Latest Update will find this news story useful.