சென்னை : ரஜினிகாந்த் - நெல்சன் இணையும் புதிய படத்தின் BREAKING- ஆன ஷூட்டிங் அப்டேட் கிடைத்துள்ளது.
கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் கடந்த ஆண்டு (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியானது.
இந்த படத்தில் லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்து இருந்தனர்.
இந்த 'அண்ணாத்த' படம் கலவையான விமர்சனகளைப் பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் ஹிட் ஆனது. தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த 169 வது படத்தை இயக்கும் வாய்ப்பு கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுக்கு கிடைத்தது. இந்த படத்தையும் எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.
இதில், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, கலை இயக்குனர் கிரண், உடையலங்காரம் - பல்லவி ஆகியோர் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
சில நாட்களுக்கு முன் இப்படத்தின் டைட்டில் லுக் வெளியானது. டைட்டில் ரத்தம் தோய்ந்த கத்தி பெரிய சங்கிலியால் கட்டப்பட்டு போஸ்டரில் இடம் பெற்றது. வெளிர் மஞ்சள் நிறத்தில் டைட்டில் அமைந்துள்ளது.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்