புஷ்பா திரைப்படம் பார்த்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார் ட்வீட் செய்திருந்த நிலையில், பதிலுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் செய்த ட்வீட் ஒன்றும், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

தமிழில் கடந்த ஆண்டு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த 'டாக்டர்' திரைப்படத்தை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார். டார்க் காமெடி ஜானரில் உருவாகியிருந்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றிருந்தது.
அது மட்டுமில்லாமல், சிவகார்த்திகேயனின் திரைப் பயணத்திலும், சற்று மாறுபட்ட ஒரு திரைப்படமாகவும் இது அமைந்தது. மேலும், கொரோனா தொற்றிற்கு பிறகு, தியேட்டர்களில், மக்களை வெகுவாக வரச் செய்ததில் டாக்டர் திரைப்படத்திற்கு முக்கிய பங்குண்டு.
ஏப்ரலில் பீஸ்ட்
கோலமாவு கோகிலா மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன், டாக்டர் திரைப்படத்தின் மூலம் அதிகம் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் என்னும் திரைப்படத்தையும் இயக்கி முடித்துள்ளார் நெல்சன். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
பின்னி எடுத்த அல்லு அர்ஜுன்
இந்நிலையில், இயக்குனர் நெல்சன், தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி, பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த 'புஷ்பா' திரைப்படத்தை பார்த்து விட்டு, அதனை பாராட்டி ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார்.
அந்த பதிவில், 'புஷ்பா.. என்ன ஒரு ஸ்வாக்.. அருமையான மற்றும் பாராட்டத்தக்க நடிப்பு அல்லு அர்ஜுன். பாக்ஸ் ஆஃபிஸில் இந்த படம் பட்டையைக் கிளப்பியதில் ஆச்சரியமில்லை' என குறிப்பிட்டிருந்தார்.
அதிகரிக்கும் பாராட்டு
தொடர்ந்து, அல்லு அர்ஜுனின் பதில் ட்வீட்டைக் குறிப்பிட்டு, 'உங்களிடம் இருந்து இன்னும் பல சிறந்த படைப்புகளை எதிர்பார்க்கிறேன். டாக்டர் உங்களுக்கு பிடித்தது என்பதில் மகிழ்ச்சி. மிக்க நன்றி' என நெல்சன் குறிப்பிட்டுள்ளார்.
சமீப காலமாகவே, இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும், தங்களது மொழியிலோ, அல்லது மற்ற மொழியிலோ, சிறந்த திரைப்படங்களைப் பார்த்ததுடன் நிறுத்திக் கொள்ளாமல், பதிலுக்கு தங்களின் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இப்படி, சக நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் எந்தவித தலைக்கணமும் இல்லாமல், பாராட்டும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், சினிமா ரசிகர்கள் மத்தியிலும், இப்படியான செயல்கள் அதிகம் பாராட்டுக்களைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.