விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'நீயா நானா' நிகழ்ச்சி, மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமான விவாத நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.
Also Read | PS1 : அப்படி போடு.. அடுத்தடுத்து மாஸ் காட்டிய "குந்தவை" & "ஆதித்த கரிகாலன்" ..
இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும் பல விஷயங்கள், அவ்வப்போது இணையத்தில் கவனம் ஈர்த்து, நெட்டிசன்கள் பலரது மத்தியில் பேசு பொருளாக மாறும்.
அந்த வகையில் சமீபத்திய டாபிக் குறித்த செய்தி, இணையத்தை அதிக அளவில் ஆக்கிரமித்திருந்தது. இதற்கு காரணம், தந்தை - மகள் பாசம் குறித்த வெளிப்பாடு அதில் அமைந்தது தான்.
அதிகமாக சம்பாதிக்கும் மனைவிகள் Vs குறைவாக சம்பாதிக்கும் கணவர்கள் குறித்த விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கணவர் ஒருவர், தனது மகளின் பிராக்ரஸ் ரிப்போர்ட்டை பார்ப்பது பற்றியும், தனக்கு கல்வி பின்புலம் இல்லாததால் மகள் காணும் கனவை அடைய தான் பாடுபடுவேன் என்றும் உருக்கத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பான வீடியோக்கள், ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் கட்டிப் போட, தந்தை மகள் பாசம் தொடர்பான பாடல்களையும், உருக்கமான காட்சிகளுடன் இணைத்து வீடியோக்களாக வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், நீயா நானா நிகழ்ச்சி மூலம் அதிகம் வைரலான கணவன், மனைவி மற்றும் மகள் ஆகியோர் Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். இதில், அவர்கள் மூவரும் ஏராளமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
அந்த வகையில், தந்தை மற்றும் மகள் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் பற்றி பேசிய விஷயம், தற்போது பலரது மனதையும் நெகிழும் வகையில் உள்ளது.
இதில், மகளின் படிப்பு மற்றும் மதிப்பெண்கள் குறித்து பேசிய வைரல் தந்தை, "நான் மதிப்பெண்ணை ஒப்பிட மாட்டேன்.அவர்களை கஷ்டப்படுத்தக் கூடாது. ஃப்ரீயாக படித்தால் தான் நன்றாக படிப்பார்கள். அதனால், நாம் அழுத்தம் கொடுத்தால் வேறு மாதிரி போய் விடும். நான் படிக்கவில்லை என்பதால் எனக்கு அது புரிகிறது. என்னுடைய ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் சிறு வயதில் நன்றாக படிக்க சொன்னது ஏன் என்பதை தற்போது நான் உணர்ந்து விட்டேன்" என்றார்.
தொடர்ந்து, தான் ஏன் மருத்துவர் ஆக வேண்டும் என விருப்பப்பட்டது பற்றி பேசிய மகள், "என் அப்பாவுக்கு உடம்பு சரி ஆவதற்கு தான்" என கூறினார். தந்தை போல யாருக்கும் கிட்னியில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக தான் மருத்துவர் ஆக வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளதாக மகள் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோவைக் காண: