இவர இப்படி பாத்து எவ்ளோ நாள் ஆச்சு! ‘நீதானே என் பொன்வசந்தம்’ ஜெய் ஆகாஷின் வைரல் ‘நியூ’ லுக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஜெய் ஆகாஷ் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்,

ஒரு சில மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஜெய் ஆகாஷ் தமிழில் ரோஜா கூட்டம், இனிது இனிது காதல் இனிது, சேவல், அடடா என்ன அழகு, வந்தே மாதரம், ராமகிருஷ்ணா, ரோஜாவனம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர். இதில் சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

சில காலம் எங்கே போயிருந்தார் என்று பலருக்கும் தெரியாமல் இருந்து வந்த நிலையில், திடீரென ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுத்து இருந்தார். ஆம், இவர் தற்போது, “நீதானே என் பொன்வசந்தம்” சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் ஜெய் ஆகாஷ் முதன்மை நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். சிலகாலம் பிரஞ்சு தாடி வைத்துக்கொண்டு ஆள் அடையாளம் தெரியாமல் வித்தியாசமான லுக்கில் நடித்து வந்த ஜெய் ஆகாஷ், தற்போது வெளியாகி இருக்கும் புதிய புரோமோவில், பழைய மாதிரியே கிளீன் ஷேவ் பண்ணி கொண்டு மிகவும் ஸ்மார்ட்டாக தெரிகிறார். பார்ப்பதற்கு இன்னும் இளமையாக ஜெய் ஆகாஷ் காட்சியளிப்பதாக கூறும் பலரும் இப்போதுதான் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடிவதாக சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

நீதானே என் பொன்வசந்தம் சீரியலை பொறுத்தவரை, நாயகிக்கு வேறு ஒருவருடன் நடக்கவிருந்த திருமணம் தற்போது நாயகன் - நாயகியின் காதல் விவகாரத்தால் நின்றுவிட்டது. இதனை அடுத்து ஜெய் ஆகாஷ் தன்னுடைய காதலை நாயகியின் தந்தையிடம் தெரிவிக்க, நாயகியின் தந்தை தங்களது மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ முடியாது என சவால் விட, அதை ஏற்ற ஜெய் ஆகாஷ், அதே ஏரியாவில் வசித்து வந்தார்.

அதாவது, நாயகின் தந்தையிடம் நல்ல பெயர் எடுப்பதற்காகவும், நம்பிக்கையை ஏற்படுத்தி சவாலில் ஜெயிப்பதற்காகவும், ஜெய் ஆகாஷ் அங்கு தங்கி வசித்து வந்தார். அதற்கான கெடு காலம் நிறைவடைந்த நிலையில், இதனிடையே ஏரியா மக்கள், ஜெய் ஆகாஷ்க்கு சப்போர்ட் செய்ய, தற்போது முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாயகியின் தந்தை இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: “பிக்பாஸ்-ல கோவப்படுறவங்கள பாக்கும்போது கொஞ்சம் OVER-ஆ தெரியுது!” - அதிரவைத்த ராஜூ .. Viral Throwback Video!

தொடர்புடைய இணைப்புகள்

Neethane en ponvasantham jai akash new old look viral

People looking for online information on Jai Akash, Neethaane En Ponvasantham, TVSerial, ZeeTamil will find this news story useful.