பிரம்மாஸ்திரா 1 -க்கு வந்த கமெண்ட்ஸ்.. 2வது & 3வது பாகத்துக்கு கால அவகாசம் கோரிய இயக்குநர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா.  அயன் முகர்ஜி இந்தப் படத்தை இயக்க பிரபல தயாரிப்பாளர்  கரன் ஜோகர் தயாரித்துள்ளார்.

Advertising
>
Advertising

பிரமாண்ட படைப்பாக பெரும் பட்ஜெட்டில் மூன்று பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் இந்த முதல் பாகத்தை Fox Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures இணைந்து இப்படத்தை வெளியிட்டனர். ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் அமிதாப் பச்சனும், நாகார்ஜூனாவும் நடித்திருக்கிறார்கள்.  தவிர, இப்படத்தில் நடிகர் ஷாருக் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.  

இந்நிலையில் இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டதுடன், இந்திய சினிமாவுக்கு இந்த படம் ஒரு முக்கிய ஒரு பங்களிப்பாக இருக்கும் என இப்படத்தின் இயக்குநர் அயன் முகர்ஜி கூறியுள்ளார். மேலும் பிரம்மாஸ்திரா முதல் பாகத்தின் குறைகளை களைந்து, முற்றிலும் மேம்படுத்தப்பட்ட 2-ஆம் மற்றும் 3-ஆம் பாகங்களை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்த தமது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ள இயக்குநர் அயன் முகர்ஜி, "பிரம்மாஸ்திரா படத்தின் முதல் பாகத்திற்கு உங்களிடம் இருந்து நாங்கள் பெற்ற அன்பு மற்றும் விமர்சனங்களை கருத்தில்கொள்கிறோம். எனவே, இப்படத்தின் இரண்டு மற்றும் 3-வது பாகங்களை மேம்படுத்தக் கூடிய பணிகளில் படக்குழுவினர் தீவிரமாகச் செயல்படுகிறோம்.

முதல் பாகத்தை விட இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் சிறப்பாக இருக்கும். அதற்காக இதன் ஸ்கிரிப்டை இன்னும் கால அவகாசம் எடுத்து மேலும் பலப்படுத்த வேண்டும் என  அறிந்துகொண்டேன்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

Need time to make Brahmastra 2nd and 3rd part Ayan mukerji

People looking for online information on Ayan Mukerji, Brahmastra Part 1, Brahmastra Part One - Shiva will find this news story useful.