தல அஜித்துடன் வலிமை படத்தில் நடிக்கிறாரா நஸ்ரியா?- விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘தல 60’ திரைப்படத்தில் நடிகை நஸ்ரியா நாஸிம் நடிக்கவிருப்பதாக பரவிய வதந்தியை படக்குழு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கும், அதில் வழக்கறிஞராக நடித்த அஜித்திற்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. 

ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோர்ட் ரூம் டிராமாவான இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து, போனி கபூரின் பேவ்யூ புராஜக்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் ‘தல 60’ திரைப்படத்தின் பூஜை கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு ‘வலிமை’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அட்லி இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தில் நடித்த நஸ்ரியா முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் பரவின.

இதனையடுத்து, நஸ்ரியா பெயர் கொண்ட ட்விட்டர் கணக்கு ஒன்றில், “வலிமை படத்தில் நான் நடிக்கவிருப்பதாக பரவும் தகவல் வெறும் வதந்தி. இதுபோன்ற பொய்யான செய்திகளில் இருந்து விலகியிருங்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பு அஜித் சாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா மற்றும் போனி கபூர் வாயிலாக அறிவிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் நடிக்க நஸ்ரியாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நஸ்ரியா பெயரில் இயங்கி வரும் குறிப்பிட்ட போலி ட்விட்டர் கணக்கில் இருந்து இந்த வதந்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தாலும், வலிமை படத்தில் அவர் நடிக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Nazriyas fake twitter refutes rumours of doing Ajiths Valimai

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, H Vinoth, Nazriya nazim, Valimai will find this news story useful.