சமீபத்தில் நடந்த அடடே சுந்தரா பத்திரிக்கையாளர் சந்திப்பில் நஸ்ரியா அளித்த பதில் வைரலாகியுள்ளது.

Also Read | PUB-ல Boyfriend-உடன் சமந்தா.. sight அடிக்கும் VJS… வைரல் 'Dippam Duppam' பாட்டு..
ரி எண்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா…
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி -முன்னணி இயக்குநர் விவேக் ஆத்ரேயா= பிரபல பட தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய மூவர் கூட்டணியில் உருவான 'அன்டே சுந்தரனக்கி' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இது தமிழில் 'அடடே சுந்தரா' என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் நடிகை நஸ்ரியா நசீம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் நஸ்ரியா. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.
கதைக்களம்…
நிறைய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட பிராமண குடும்பத்தில் ஒரேயொரு ஆண் வாரிசாக சுந்தர் என்கிற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடிகர் நானி நடித்திருக்கிறார். இதன் காரணமாகவே அவர் மீது அனைவரும் அதீத அக்கறையும், அன்பையும் செலுத்துகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் தன் மீது காட்டும் அதீத அரவணைப்பை தவிர்ப்பதற்காக ஜோதிடர்கள் கூறும் ஒவ்வொரு ஆலோசனையும் பின்பற்றவேண்டிய அழுத்தத்திற்கு சுந்தர் ஆளாகிறார். இதனால் அவருக்கு பல நெருக்கடிகள் ஏற்படுகிறது.
இந்த தருணத்தில் சுந்தர், லீலா தாமஸ் என்ற தன்னுடைய ஆத்ம தோழியை காண்கிறார். அவரது பெயரே அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதை குறிக்கிறது. இந்த இரண்டு குடும்பங்களும் வெவ்வேறு சாதி, மதம் சார்ந்து இருக்கிறார்கள். ஆனால் படத்தின் முக்கிய முரண்பாடாக இந்த அம்சம் மையப்படுத்தப்படவில்லை.
நஸ்ரியாவின் Thug பதில்…
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நஸ்ரியாவும் கலந்துகொண்டார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் ”நீங்கள் ஒரு முஸ்லீம் பெண்ணாக இருந்துகொண்டு கிறிஸ்துவ பெண் வேடத்தில் நடித்துள்ளீர்கள்.. மேலும் படத்தில் ஒரு இந்து இளைஞரை திருமணம் செய்வது போல நடித்துள்ளீர்கள். இந்த மாதிரி திரைக்கதைகளை எப்படி தேர்வு செய்கிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த நஸ்ரியா “படத்தோட இயக்குனர் கதை சொன்னபோதே எனக்கு பிடித்துவிட்டது. கிறிஸ்துவ பெண்ணாக நடிக்க என்ன பண்ணனும்னு நினைக்கல. லீலா தாமஸ் கதாபாத்திர புரிஞ்சுகிட்டு நடிச்சேன்” எனக் கூறியுள்ளார். நஸ்ரியாவின் இந்த பதில் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8