இயக்குநரின் மனைவியுடன் 'வாத்தி கம்மிங்' பாட்டுக்கு குத்தாட்டம்! அட்லீ பட நாயகியின் VIRALVIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

படம் வெளியாகும் முன்பே வெளியான ‘வாத்தி கம்மிங்’ பாடல் ட்ரெண்டானது. இந்நிலையில் அண்மையில் இந்திய பிரபலங்கள் தொடங்கி உலக பிரபலங்கள் வரை இப்பாடலுக்கு நடனமாடும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் நடிகை நஸ்ரியா நசீம் இப்பாடலுக்கு நடனமாடிய வீடியோவை  “ஏனென்றால் வாத்தி கம்மிங் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. பின்னே ஏன் இதை செய்யக் கூடாது?” என்ற கேப்ஷனுடன்  தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதை அடுத்து வைரலாகி வருகிறது. 

தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை நஸ்ரியா நசீம். தமிழில்  நேரம், ராஜா ராணி படங்களில் நடித்த நஸ்ரியா பின்னர் நையாண்டி, திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். பின்னர் 2014-ஆம் ஆண்டு ஃபகத் ஃபாசிலுடன் இவர் இணைந்து நடித்த பெங்களூர் டேஸ் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது.

அந்த வருடமே ஃபகத் பாசிலை நடிகை நஸ்ரியா திருமணம் செய்துகொண்டார். எனினும் இன்னும் நஸ்ரியாவுக்கு ரசிகர்கள் குறைந்த பாடில்லை. வாத்தி கம்மிங் பாடலில் நஸ்ரியாவுடன் நடனமாடுபவர் நேரம், பிரேமம் படங்களின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் மனைவி அலீனா அல்போன்ஸ்.

ALSO READ: "இந்தியா முழுக்க விஜய விரும்புவாங்க!".. 'Thalapathy65'-ல் பணியாற்றும் நண்பன் பட கலைஞர் ட்வீட்!

இயக்குநரின் மனைவியுடன் 'வாத்தி கம்மிங்' பாட்டுக்கு குத்தாட்டம்! அட்லீ பட நாயகியின் VIRALVIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Nazriya Nazim aleena alphonse Vathi coming Steps நஸ்ரியா நசீம்

People looking for online information on Atlee, Atlee Kumar, Instagram, Master, Nazriya nazim, Trending, Vaathicoming, Vijay, ViralVideo will find this news story useful.