பிரபல போட்டோகிராபருடன் சேர்ந்து நஸ்ரியா நடத்திய போட்டோஷூட்.. செம்ம காஸ்டியூம்ல!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நஸ்ரியா பிரபல போட்டோ கிராபர் உடன் இணைந்து நடத்திய  LATEST போட்டோ ஷூட் போட்டோக்கள்  வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | மைக் மோகன் படத்தில் யோகிபாபுவின் அசத்தல் கேரக்டர்.. தெறிக்கவிடும் BTS புகைப்படங்கள்.!

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் 2013 ஆம் ஆண்டு வெளியான நேரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா நசீம். குழந்தை நட்சத்திரமாக நடித்து கேரளா முழுவதும் அறியப்பட்டவர்.

தமிழில், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடிபேசவும், திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

நஸ்ரியாவுக்கு என்றே தமிழ் சினிமாவில் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. முன்னணி நடிகையாக வலம் வந்த போதே நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் சினிமாக்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, சில ஆண்டுகளுக்கு முன் மலையாள படங்களில் நடிக்க துவங்கினார். இதில் பகத் பாசில் கூட நடித்த ட்ரான்ஸ் படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா, அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், குடும்பத்தினர், நண்பர்கள் உடன் இருக்கும் புகைப்படங்கள், கணவர் பகத்துடன் பயணம் செய்யும் புகைப்படங்களை பதிவேற்றுவார்.

அதேபோல் தற்போது பிரபல போட்டோ கிராபர் அட்ரின் செகுரியா உடன் இணைந்து நடத்திய LATEST போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பச்சை நிறத்தில் ஸ்லீவ்லெஸ் ஆடையில் நஸ்ரியா இந்த போட்டோக்களில் காட்சியளிக்கிறார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

ஜூன் 10ஆம் தேதி மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான Ante Sundaraniki படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

லீலா தாமஸ் என்ற கிறிஸ்தவ பெண்ணாக இப்படத்தில் நஸ்ரியா நடித்துள்ளார். இந்த படத்தில் நஸ்ரியா, நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Also Read | விக்ரம் சக்சஸ் மீட்-க்கு சமைச்ச பிரபல இளம் ஹீரோ.. இவரு Chef-ஆம்பா.. வைரல் போஸட்!

தொடர்புடைய இணைப்புகள்

Nazriya Nasim Latest Photoshoot with Photographer adrin sequeria

People looking for online information on Nazriya, Nazriya Nasim, Nazriya Nasim Latest Photoshoot will find this news story useful.