அடடே.. NAZRIYA-வின் அனல் தெறிக்கும் DANCE.. ‘அடடே சுந்தரா’ பட விழா.! VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மைத்திரி மூவி மேக்கர்ஸ் சார்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் ஜூன் 10-ஆம் தேதியன்று ‘அடடே சுந்தரா’ திரைப்படம் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ‘விக்ரம்’ பார்த்த ‘அவ்வை சண்முகி’ மேக்கப் மேன் மகள்.. இவங்க ஹாலிவுட் நடிகையா.?

தெலுங்கு இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் நானி, நஸ்ரியா, நரேஷ், அழகம்பெருமாள், நதியா, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, இந்த படத்திற்கு விவேக் சாஹர் இசையமைத்திருக்கிறார். நகைச்சுவைக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ‘அடடே சுந்தரா’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உருவாகியுள்ளது.

முன்னதாக தமிழ்நாட்டில் நடந்த இந்த படத்தின் விழாவில் இப்படத்தின் ஹீரோயின் நஸ்ரியா பேசும்போது, “தமிழில் பேசி ரொம்ப நாளாச்சு.. தப்பு வந்துடும்னு பயந்து இங்க்லீஷ்ல பேசுறேன்.. இந்தப் படத்துல, நடிகர் நானியுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்வான அனுபவம். காதல் கதைக்கு ஊக்கமும், ஆதரவும் அளித்து வரும் தமிழ் ரசிகர்கள் ‘அடடே சுந்தரா’ படத்துக்கும் தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டதுடன், பொழுதுபோக்கு அம்சங்களுடன் காதலும் நகைச்சுவையும் கலந்து ‘அடடே சுந்தரா’ படம் உருவாகியிருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த பட விழாவில் நடிகை நஸ்ரியா படக்குழுவினருடன் இணைந்து செமயாக நடனம் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது. முன்னதாக நடிகை நஸ்ரியா நீண்ட நாட்கள் கழித்து நடித்து தமிழிலும் வெளியாகும் திரைப்படம் என்பதால் அடடே சுந்தரா படத் தொடக்கத்தில் இருந்தே நஸ்ரியாவின் தமிழ் ரசிகர்கள் படத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

மேலும் நஸ்ரியாவுக்கு உரியே முக பாவனைகளும், க்யூட்டான ரியாக்‌ஷன்களும் திரைப்படத்தில் மட்டுமில்லாமல், அவர் பங்கு பெறும் திரை விழாக்களிலும் இன்னும் மாறாமல் அப்படியே உள்ளதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். தமிழில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், வெளியாகியிருக்கும் விக்ரம் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கும் பிரபல நடிகர் ஃபகத் ஃபாசிலின் மனைவியே நடிகை நஸ்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | பெரும் சோகம்!. சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் மரணம்! அதிர்ச்சியில் கேரள திரையுலகம்

அடடே.. NAZRIYA-வின் அனல் தெறிக்கும் DANCE.. ‘அடடே சுந்தரா’ பட விழா.! VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Nazriya fire dance on stage adade sundara function video

People looking for online information on Nani, Nazriya adade sundara will find this news story useful.