தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா.

கடைசியாக சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்தார். தற்போது, விஜய்சேதுபதியுடன் இயக்குனர் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலும், அஸ்வின் இயக்கத்தில் கனெக்ட் படத்திலும், அட்லி - ஷாருக்கானின் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் S R பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பாக ஒரு புதிய நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகி, அந்த படத்தின் பூஜையும் போடப்பட்டு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபுவின் உதவி இயக்குனர் விக்னேஷ் இயக்குகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக Production No 38 என பெயரிடப்பட்டது. தற்போது இந்த படத்திற்கு O2 என பெயரிடப்பட்டுள்ளது. வேதியியலில் O2 என்பது உயிர் வாயு ஆக்ஸிஜனை குறிக்கும்.
ஜோக்கர், அருவி, கைதி, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் ஆகும். சமந்தா , ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படங்களையும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.