BREAKING: 'பிகிலை தொடர்ந்து மீண்டுமொரு 'தீபாவளி' ட்ரீட்... ஹைலைட்டே 'அந்த' விஷயம் தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாராவின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மூக்குத்தி அம்மன். இதில் இவருடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, இந்துஜா ரவிச்சந்திரன், ஸ்மிருதி வெங்கட் மற்றும் அஜய் கோஷ் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

என்.ஜே.சரவணனுடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கி இருக்கும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டெர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து இருக்கிறார். நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடித்து இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் வருகின்ற தீபாவளி அன்று இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் தொலைக்காட்சி இரண்டிலும் ஒரே நாளில் ஒளிபரப்பாக இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த வருடம் தீபாவளி தினத்தில் தளபதி விஜயுடன் இணைந்து நயன்தாரா நடித்திருந்த 'பிகில்' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags : Bigil

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara's Mookuthi amman premiere on Diwali In Vijay TV

People looking for online information on Bigil will find this news story useful.