நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ஸ்பெஷல் ஓனம் கொண்டாட்டம்.!! - ஜோடிகளின் போட்டோக்கள் செம வைரல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கியுள்ள இவர், தெலுங்கு சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் இவர் நடிக்கவுள்ளார். 

இந்நிலையில் நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. இன்று ஓனம் பண்டிகையை கேரளாவில் கொண்டாடியுள்ள இருவரும், அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து ரசிகர்கள் அவர்களின் க்யூட் புகைப்படங்களுக்கு லைக்ஸ் போட்டு வருவதுடன் ஓனம் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் | Nayanthara's latest pic with vignesh sivan is going viral

People looking for online information on Nayanthara, Nayanthara Onam, Vignesh shivan will find this news story useful.