விமானத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்.. இந்த நாட்டுக்கு தான் போறாங்களா? ஆஹா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் விமான பயணம் செய்யும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "விருமன்" படத்தின் FDFS.. ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் படம் பார்த்த கார்த்தி! செம வீடியோ

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமண நிகழ்விற்கு இயக்குனர் மணிரத்னம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினி, கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அனிருத், அட்லி, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கும் சென்று ஜோடியாக விக்னேஷ் சிவன் & நயன்தாரா சாமி தரிசனம் செய்தனர்.

அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர். அங்கு தாய்லாந்து ரசிகர்களுடன் அவர்கள் எடுத்த புகைப்படங்களும் வைரலாகின.

தேனிலவு முடிந்து இந்தியா திரும்பியதும் நயன்தாரா, ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சில நாட்களுக்கு முன் இணைந்தார்.  இது தொடர்பான புகைப்படங்கள் & வீடியோக்கள் வெளியாகின.

விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக விளம்பர பணிகளில் ஈடுபட்டார்.

இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விமானம் மூலம் ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு செல்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் "தொடர் வேலைப்பளுவுக்கு பிறகு எங்களுக்கான நேரம்.. பார்சிலோனா நகருக்கு செல்லும் போது மனைவியுடன்" என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

Also Read | 'திருச்சிற்றம்பலம்' படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமம்.. கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara Vignesh Shivan Traveling to Spain Barcelona Viral Photos

People looking for online information on Nayanthara, Nayanthara Vignesh Shivan Traveling to Spain, Vignesh shivan will find this news story useful.