நயன் தாரா விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து பல படங்களை தயாரிக்க முன்வந்துள்ளனர்.
தமிழின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவராக திகழ்கிறார் நடிகை நயன்தாரா. குறிப்பாக பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு நயன்தாரா உள்ளிட்ட நாயகிகள் நல்ல சாய்ஸ் என பல இயக்குநர்கள் கருதுகின்றனர்.
அப்படியான படங்களில் நடித்தாலும் தளபதி விஜயுடன் பிகில், தல அஜித்துடன் விஸ்வாசம் என முன்னணி மாஸ் ஹீரோக்களின் பிளாக் பஸ்டர் படங்களில் நடிக்கவும் நயன் தாரா தவறுவதில்லை. எனவே தான் இன்றுவரை அதிக ரசிகர்கள் அவருக்கு கூடிக்கொண்டே போகின்றனர்.
இதேபோல் ஜாலியான கமர்ஷியல் படங்களை தனக்கே உரிய பாணியில் வித்தியாசமாக கொடுத்து வருபவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இந்நிலையில் தான் இந்த இணை தங்களது ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பின் கீழ், பல படங்களை சேர்ந்து தயாரித்து வருகின்றனர். குறிப்பாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ராக்கி, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் இந்த தயாரிப்பு நிறுவனங்களின் கீழ் தயாரிக்கப்படுகின்றன.
முன்னதாக அறிமுக இயக்குநர் வினோத் ராஜின் இயக்கத்தில் கூழாங்கல் திரைப்படத்தை தயாரித்திருந்தனர். இதுபற்றி கூறும்போது தலைப்பு எளிமையாக இருந்தாலும் இந்த படம் ஏற்படுத்திய தாக்கம் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் சர்வதேச பட விழாக்களுக்கு அனுப்பவிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
அந்த வகையில் கூழாங்கல் திரைப்படம் தற்போது #Shanghai சர்வதேச திரைப்பட விழாவிலும் தேர்வாகியிருப்பதாகவும் மரியாதையாகவும் பெருமிதமாகவும் உணர்வதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தமது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.