திருமணக் கோலத்தில் நயன்தாரா- விக்னேஷ் சிவன்… ரசிகர்களின் வாழ்த்துமழை.. VIRAL PIC

முகப்பு > சினிமா செய்திகள்

By |

 

Advertising
>
Advertising

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்துள்ள நிலையில் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்


கோலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளாக கடந்த சில ஆண்டுகளாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் வலம் வந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் பல இடங்களில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சமீபத்தில் கூட, இருவருமாக இணைந்து திருப்பதி உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்களும், பெரிய அளவில் வைரலாகி இருந்தது. இதையடுத்து அவர்களின் திருமணம் எப்போது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

கலந்துகொண்ட பிரபலங்கள்…

இந்நிலையில் இன்று (ஜூன் 9) விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோரின் திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற நட்சத்திர ஓட்டல் இன்று ஜூன் 9 ஆம் தேதி நடந்துள்ளது. இந்த நிகழ்வுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பல திரையுலகப் பிரபலங்கள் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

வெளியான புகைப்படம்….

இந்நிலையில் இருவருக்கும் தற்போது திருமணம் முடிந்துள்ள நிலையில் மணக்கோலத்தில் நயன்தாராவை விக்னேஷ் சிவன் முத்தமிடும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் புதுமணத் தம்பதிகளுக்கு தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara vignesh shivan marriage photo viral

People looking for online information on Nayanthara, Nayanthara wedding, Vignesh shivan will find this news story useful.