நயன் - விக்கி ஹனிமூனுக்காக தங்கியிருக்கும் பிரபல ஹோட்டல்.. ஒரு நாள் வாடகை மட்டும் இம்புட்டா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தேனிலவுக்காக தாய்லாந்தில் தங்கியுள்ள தனியார் ரிசார்ட்டின் கட்டண விவரங்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | பிரபல கிரிக்கெட் வீராங்கனையின் BIOPIC படம்... வேறலெவலில் தயாரான அனுஷ்கா சர்மா! சூப்பர் அப்டேட்

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா ஐயா படம் மூலம் தனது கோலிவுட் அறிமுகத்தைத் தொடங்கினார். அதன்  பின் சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி படங்கள் மூலம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.

அதன் பின்னர் ரீ என்ட்ரி ஆகி ராஜாராணி, ஆரம்பம், அறம், விஸ்வாசம் படங்களில் அவர் தனது சிறந்த நடிப்புத் திறமையால் ரசிகர்களின் இதயங்களை வென்றதால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டார்.  இவர் கடைசியாக தமிழில் அண்ணாத்த,O2, காத்துவாக்குல ரெண்டு காதல்  படங்களில் காணப்பட்டார்.

தற்போது சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர், ஷாருக்கான் மற்றும் அட்லியின் படம், அல்போன்ஸ் புத்ரனின் கோல்ட் படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் இயக்குனர் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பின் தேனிலவுக்காக தாய்லாந்து சென்றுள்ளனர். தாய்லாந்தில் உள்ள தி சியாம் விடுதியில் தங்கி உள்ளனர். இந்த ஹோட்டலில் தங்க ஒரு நாள் வாடகையாக குறைந்தபட்சம் 19,000 THB (இந்திய மதிப்பில் 42,000 ரூ), அதிகபட்சமாக 45,000 THB (இந்திய மதிப்பில் 1 லட்ச ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

Also Read | TRENDING: ஹனிமூனில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்.. ரொமான்டிக் லுக்கில் விக்கி பகிர்ந்த சூப்பர் PHOTOS!

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara Vignesh Shivan Honeymoon Hotel The Siam Bangkok

People looking for online information on Nayanthara, Nayanthara Vignesh Shivan Honeymoon Hotel, The Siam Bangkok, Vignesh shivan will find this news story useful.